அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் யு.என்.கெபிட்டாட் ஸ்தாபனத்தின் வேலைத்திட்டங்கள் நிறைவு-அலுவலக உபகரணங்கள்மன்னார் நகர சபையிடம் கையளிப்பு-Photos

மன்னார் நகர சபையுடன் இணைந்து செயற்பட்டு வந்த 'யு.என்.கெபிட்டாட்' என அழைக்கப்படும் 'ஐக்கிய நாடுகள் வாழ்வக ஸ்தாபன' அமைப்பின் வேலைத்திட்டங்கள் மன்னாரில் முடிவடைந்த நிலையில் குறித்த அமைப்பு தாம் பயன்படுத்தி வந்த ஒரு தொகுதி அலுவலக உபகரணங்களை மன்னார் நகர சபையிடம் இன்று செவ்வாய்க்கிழமை(20) காலை வைபவ ரீதியாக கையளித்துள்ளனர்.  

மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.இதன் போது மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ்,மன்னார் நகர சபை செயலாளர் றொனால்ட் லெம்பேட்,யு.என்.கெபிட்டாட் அமைப்பின் திட்ட முகாமையாளர் இந்து வீரசூரி, யு.என்.கெபிட்டாட் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் யூட் பிரசன்னா,மற்றும் அவ் அமைப்பின் அலுவலகர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போதே குறித்த அமைப்பினர் பயன்படுத்தி வந்த ஒரு தொகுதி அலுவலக உபகரணங்களை மன்னார் நகர சபையின் பயன்பாட்டிற்காக மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசத்திடம் கையளித்தனர்.

யு.என்.கெபிட்டாட் என்ற குறித்த ஸ்தாபனம் மன்னார் நகர சபையுடன் இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வந்தது.

இந்த வகையில் தொடர்ச்சியாக கடல் நீர் உற்சென்று பாதீப்படையும் மன்னார் பள்ளிமுனை 49 வீட்டுத்திட்டம் உற்பட அப்பகுதியில் கடல் நீர் கிராமங்களுக்குள் உற்செல்ல முடியாத வகையில் 9 மில்லியன் ரூபாய் செலவில் தடுப்புச் சுவரை அமைத்துள்ளனர்.

அத்துடன் துருசு,வீதிகள் ஆகியவற்றையும் குறித்த பகுதியில் அமைத்துள்ளனர்.

இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 200 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பலனடைந்துள்ளதாக மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ் தெரிவித்தார்.






மன்னாரில் யு.என்.கெபிட்டாட் ஸ்தாபனத்தின் வேலைத்திட்டங்கள் நிறைவு-அலுவலக உபகரணங்கள்மன்னார் நகர சபையிடம் கையளிப்பு-Photos Reviewed by Admin on January 20, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.