சம்பந்தன், சுமந்திரனுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறு கோரிக்கை?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு தொகுதி உறுப்பினர்கள் இவ்வாறு ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரியுள்ளனர்.
கூட்டமைப்பின் இணக்கப்பாடின்றி சம்பந்தனும் சுமந்திரனும் தேசிய சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஒழுக்காற்று விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரனும் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் இணக்கப்பாடு இன்றி சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்றமையானது கட்சியின் யாப்பிற்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் வரையில் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதில்லை என வட மாகாண சபை முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்ற சுமந்திரன், சம்பந்தன் ஆகியோரின் உருவப்படங்கள் லண்டனில் எரிக்கப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சம்பந்தன், சுமந்திரனுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறு கோரிக்கை?
Reviewed by NEWMANNAR
on
February 06, 2015
Rating:

No comments:
Post a Comment