கிழக்கு மாகாண முதலமைச்சரானார் ஹாபிஸ் நசீர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண அமைச்சருமாக இருந்த ஹாபீஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண முதலமைச்சராக இன்று மாலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ முன்னிலையில், திருகோணமலையில் இந்த சந்திப்பிரமாணம் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற உடன்படிக்கைக்கு அமைய இறுதி இரண்டரை வருடங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சு பதவி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற வகையில் குறித்த நியமனம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாண முதலமைச்சரானார் ஹாபிஸ் நசீர்
Reviewed by NEWMANNAR
on
February 06, 2015
Rating:

No comments:
Post a Comment