மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான தனியார் போக்குவரத்துச் சேவைகள் ஸ்தம்பிதம்.-Photos
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணிகள் சேவையில் ஈடுபடும் மன்னார் தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்திற்கு செந்தமான பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படாத நிலையில் அதன் உரிமையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பினை மேற்கொண்டமையினால் நேற்று வெள்ளிக்கிழமை(27) மதியம் முதல் யாழ் செல்லும் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபட புதிதாக அனுமதிப்பத்திரம் வழங்கியதன் காரணத்தினாலேயே குறித்த பணிப்பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,அனுமதிப்பத்திரம் வழங்கியதில் முறைக்கேடுகள் காணப்படுவதாகவும் மன்னார் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
-புதிதாக அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்ட தனியார் பேரூந்து உரிமையாளர் ஒருவரும், மேலும் சிலரும் நேற்று(27) வெள்ளிக்கிழமை காலை முதல் மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணிகள் சேவையினை மேற்கொண்டிருந்தனர்.
அதில் பேரூந்து உரிமையாளர் ஒருவர் இலாப நோக்குடன் பல தடவைகள் தனது போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை அடிக்கடி மாற்றி சேவையில் ஈடுபடுவதினால் ஏனைய மன்னார்-யாழ் சேவையில் ஈடுபடும் பேரூந்து உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே குறித்த செயற்பாடுகளை கண்டித்தும்,அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யவும் கோரி நேற்று(27) வெள்ளிக்கிழமை மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான மன்னார் தனியார் போக்குவரத்துச் சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
எனினும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது விட்டால் இன்று சனிக்கிழமையும்(28) பணிப்பகிஸ்கரிப்பு தொடரும் என மன்னார் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான தனியார் போக்குவரத்துச் சேவைகள் ஸ்தம்பிதம்.-Photos
Reviewed by NEWMANNAR
on
February 28, 2015
Rating:
No comments:
Post a Comment