அண்மைய செய்திகள்

recent
-

தலை மன்னார் புகையிரதம் நீடிக்கப்படுமா?



தென்னிந்தியாவில் இருந்து இறப்பர் தோட்டங்களிலும் , தேயிலை தோட்டங்களிலும் வேலை செய்வதற்காக தொழிலாளர்களை கொண்டு வருவதற்காக தலை மன்னார் துறை முகத்துடன் இணைந்ததாக இப்பபாதை அமைக்கப்பட்டது

வடபுலத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகள் காரணமாக 1990 உடன் புகையிரத சேவை நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் புகையிரத பாதை முற்றாக அழிக்கப்பட்டு விட்டது. குறைந்த செலவில் பயணம் செய்யும் வாய்ப்பை மன்னார் பிரதேச மக்கள் இழந்தனர்.அது மட்டும் இன்றி அரச ஊழியர்களுக்கு வழங்கபபட்ட இலவச ஆணைச்சீட்டு(வரண்ட்) சலுகையையும் மன்னார் மாவட்ட அரச ஊழியர்கள் 24 வருடங்களாக இழந்து வருகின்றனர்.

சமாதானத்தின் பின்னர் இந்திய நிறுவனத்தால் மதவாச்சி தலை மன்னார் வீதி புதிதாக அமைக்கப்பட்டு மடு ரோட் வரை புகையிரத சேவையும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.அதன் பின்னர் தலைமன்னார் புகையிரதம் விரைவில் ஆரம்பமாகுமென்ற செய்தி இந்தியத்துணைத் துர்துவராலும்,ரெயில்வே திணைக்கள அதிகாரிகளாலும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

விரைவில் தலை மன்னார் வரையில் மன்னார் புகையிரத சேவை தொடரும் என மன்னார் மக்கள் பெரும் ஆவலோடு காத்துக்கிடக்கின்றனர்.இராமானுஜம் , லங்கா ராணி இந்திய கப்பல் சேவையுடன் இணைந்ததான புகையிரத சேவை நடைபெற்ற அந்த வசந்த காலம் மீண்டும் பிறக்குமா 

 கே.சி.எம்.அஸ்ஹர்
தலை மன்னார் புகையிரதம் நீடிக்கப்படுமா? Reviewed by NEWMANNAR on February 27, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.