கால்பந்தாட்ட வீரர்களுடன் 50 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன விமானம் கண்டுபிடிப்பு-Photos
நீண்ட மலைத்தொடரான சிலியின் 'ஆண்டஸ்' மலையில் கால்பந்து வீரர்கள் குழுவுடன் 50 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன விமானம் மலை ஏறுபவர்களால் கண்டுபிடிக்கபட்டுள்ளது.
லேன் சிலி டக்ளஸ் டிசி-3 என்ற அந்த விமானம் ஏப்ரல் 3, 1961 அன்று காணாமல் போனது. அதன் பின் அந்த விமானத்தை பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை. இந்த நிலையில் அந்த விமானத்தின் சிதைந்த பாகங்கள் தென் சான்டியாகோவிலில் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள மோல் என்ற இடத்தில் மலை ஏறும் வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. மலை ஏறும் குழுவினர் எடுத்த விமானத்தின் புகைப்படங்களை நேற்று சிலி நாட்டு தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
விமானத்தின் பாகத்தை கண்டறிந்த லியோனர்டோ அல்போர்னோஸ் என்பவர் கூறுகையில், தரை மட்டத்திலிருந்து 10000 அடி உயரத்தில் விமானத்தின் பாகங்கள் கிடந்தது. அதே போல் மனித எலும்புகளும் அங்கு காணப்பட்டன என கூறினார்.
விமானம் விபத்துக்குள்ளான போது அதில் 34 பயணிகள் பயணம் செய்திருந்தனர். அதில் கிரீன் கிராஸ் கால்பந்து அணியை சேர்ந்த பயிற்சியாளர் அர்னல்டோ வேஸ்குவெஸ், எட்டு விளையாட்டு வீரர்கள், இதர அணி நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள் பயணம் செய்தனர். விமானம் காணாமல் போனதற்கு பின் சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்னர் அது பற்றிய விபரம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கால்பந்தாட்ட வீரர்களுடன் 50 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன விமானம் கண்டுபிடிப்பு-Photos
Reviewed by NEWMANNAR
on
February 09, 2015
Rating:

No comments:
Post a Comment