புகையிரதத்தில் மோதுண்டு இளைஞன் பலி மற்றொருவர் காயம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூருக்கும் செங்கலடிக்கும் இடைப்பட்ட புகையிரதப் பாதையில் புகையிரதத்தில் மோதுண்டு இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் மற்றொரு இளைஞன் படுகாயமடைந்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் சனிக்கிழமை 07.02.2015 மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் செங்கலடியைச் சேர்ந்த சரவணபவன் சங்கீதன் (வயது 17) என்ற இளைஞனே பலியாகியுள்ளார்.
கே. பிறேமானந்த் (வயது 15) எனும் செங்கலடியைச் சேர்ந்த மற்றொரு இளைஞன் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செங்கலடி வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
இறந்தவரின் சடலம் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.ஏறாவூர் பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
புகையிரதத்தில் மோதுண்டு இளைஞன் பலி மற்றொருவர் காயம்
Reviewed by NEWMANNAR
on
February 08, 2015
Rating:

No comments:
Post a Comment