அண்மைய செய்திகள்

recent
-

மடு கல்வி வலயத்திற்குற்பட்ட தம்பனைக்குளம் கிராம மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு!-Photos



மடு கல்வி வலயத்திற்குற்பட்ட தம்பனைக்குளம் கிராம மாணவர்களுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேற்று(7) ஞாயிற்றுக்கிழமை ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

தம்பனைக்குளம் முத்துமாரியம்மன் ஆலயத்தலைவர் தங்கவேல் சுப்ரமணியம் அஜந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மன்னார் நகரசபை உறுப்பினர் ரட்ணசிங்கம் குமரேஸ், தம்பனைக்குளம் கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவர் ஜேசுதாசன் வோல்டன், கிராம மாதர் அபிவிருத்திச்சங்கத்தலைவி செல்வராசா புஸ்பராணி, தம்பனைக்குளம் 'நியூஸ்டார்' விளையாட்டுக்கழக தலைவர் சிவலிங்கம் சிவகாந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலி நேயர்களின் நிதி பங்களிப்புடன் பாடசாலை மாணவர்களுக்கு குறித்த கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









மடு கல்வி வலயத்திற்குற்பட்ட தம்பனைக்குளம் கிராம மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு!-Photos Reviewed by NEWMANNAR on February 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.