அதிக விலையில் பொருட்கள் விற்கப்பட்டமை குறித்து 1,500 முறைப்பாடுகள்
அதிக விலையில் பொருட்கள் விற்கப்பட்டமை குறித்து 1,500 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.
நிர்ணய விலையை விட கூடுதல் விலைக்கு மண்ணெண்ணெய் விற்கப்படுகின்றமை தொடர்பிலேயே அதிகளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே அதிகளவான முறைப்படுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன
கொழும்பு புறக்கோட்டை பகுதியிலுள்ள உணவகங்களில் தேநீர்,அப்பம் என்பன அதிக விலைக்கு விற்கப்படுவது தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை வரவு செலவுத்திட்ட நிவாரணங்களை நுகர்வோருக்கு வழங்காத வர்த்தகர்களை கண்டறியும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாடுமுழுவதும் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஜே.ஏ.எம்.டக்ளஸ் குறிப்பிட்டுள்ளார்.
நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு, மண்ணெண்ணெய், விலை ம
அதிக விலையில் பொருட்கள் விற்கப்பட்டமை குறித்து 1,500 முறைப்பாடுகள்
Reviewed by NEWMANNAR
on
February 09, 2015
Rating:

No comments:
Post a Comment