மன்னார் கடற்பரப்பிலிருந்து மசகு எண்ணெய் பெறப்படும்:ரங்கே பண்டார
இவ் வருட இறுதிக்குள் மன்னார் பிரதேசத்தின் கடற்பரப்பிலிருந்து மசகு எண்ணெய் பெறப்பட்டு எமது எரிபொருள் தேவையினை எம்மாலேயே நிறைவேற்றிக்கொள்ள முடியுமாக இருக்கும். எனினும் குறிப்பிட்ட காலத்துக்கே இவ் எரிபொருள் போதுமானதாக உள்ளது என மின்சக்தி எரிபொருள் துறை இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
வணாத்தவில்லு பிரதேசத்தில் நடைபெற்ற புதிய மின்சார இணைப்புத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றி இராஜாங்க அமைச்சர்,
கடந்த அரசாங்க காலத்தில் மன்னார் பிரதேசத்தில் மசகு எண்ணெய் ஆராய்ச்சிக்கான முயற்சிகள் போதுமானளவில் மேற்கொள்ளப்படவில்லை. நாம் தற்போது உலகளவிலான தொழிற்நுட்பத்தினை பயன்படுத்தி நாட்டுக்கு பாதிப்பேற்படாத வகையில் ஒப்பந்தங்களினை செய்து இவ் வருடத்திற்குள் நமது நாட்டிலிருந்து மசகு எண்ணெய் பெற்றுக் கொள்வதற்கான முயற்சியில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றோம்.
இதன் மூலம் நமது எரிபொருள் தேவைகளினை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்பு ஏற்படும். இதற்காக தற்போது சீனா மற்றும் கொரியா உள்ளிட்ட சில நாடுகளினது கம்பனிகளிடம் பேச்சுவார்த்தை இடம் பெறுகிறது.
மன்னார் கடற்பரப்பிலிருந்து மசகு எண்ணெய் பெறப்படும்:ரங்கே பண்டார
Reviewed by NEWMANNAR
on
February 09, 2015
Rating:
.jpg)
No comments:
Post a Comment