கடந்த காலத்தில் இலங்கைக்கு கிடைக்காமல் போன ஜீஎஸ்பி வரிச் சலுகை மீண்டும் இலங்கை பெற்றுக் கொள்ளவுள்ளது றிசாத் பதியுதீன் .
கடந்த காலத்தில் இலங்கைக்கு கிடைக்காமல் போன ஜீஎஸ்பி வரிச் சலுகையினை மீண்டும் இலங்கை பெற்றுக் கொள்ளவுள்ளதாக கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
இந்த சலுகையினை இலங்கைக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் ஆராயும் உயர் ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரதி நிதிகள் குழுவினர் நேற்று அமைச்சர் றிசாத் பதியுதீனை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.ஒன்றியத்தின் இலங்கை்கான தலைவர் டேவிட் ஒளி அவர்கள் அமைச்சரை சந்தித்து இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
மேலும் ஒன்றியத்தின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் கருத்துரைக்கும் போது-இலங்கை தொடர்பில் ஜரோப்பிய ஒன்றியம் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலையில் உள்ளது.இருந்த போதும்,இலங்கை தமது பொருளாதார அபிவிருத்தியினை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் தமது நேரத்தை தற்போது அடைந்துள்ளது..ஜீ.எஸ்.பீ.சலுகையினை பெற்றுக்கொள்ளும் நாடுகள் 27 வகையான உடன்பாடுகளுக்கு அமைய செயற்பட வேண்டியுள்ளது.
சிறுவர்களை வேலைக்கமர்த்தாமை,தொழிலாளர் மற்றும் மனிதவளப்பாதுகாப்பு,எனபன இதில் பிரதானமானதாகும்.இந்த அடிப்படை தகமைகளை இலங்கை பூர்த்தி செய்துள்ளதாக நாம் அறிகின்றோம்.இந்த விடயங்கள் தொடர்பில் பேச்சுக்களை நடத்த பிரிஸல்ஸ் நாட்டில் இருந்து உயர் மட்டக் குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளது.இரு தரப்பு பேச்சு வார்த்தையினை தொடர்ந்து அவர்கள் வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் ஏப்ரல் மாதம் இன்னுமொரு குழுவினர் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளனர்.இதனடிப்படையில் இதற்கான அனுமதி வழங்கப்படுவது தொடர்பில் நடவடிக்கை வழங்கப்படும்.
ஜீஎஸ்பீ சலுகை இலங்கைக்கு கிடைக்காமல் போனதால் இலங்கையின் ஆடை உற்பத்தி துறையில் பெரும் இழப்புக்களை சந்திக்க நேரிட்டதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் றிசாத் பதியுதீன்,இந்த ஜீஎஸ்பீ கிடைப்பதில் இலங்கை பொருளாதார ரீதியில் வலுமிக்கதாக மாறும் என்பது எமது நம்பிக்கையாகும் என்றும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் இந்த சலுகை கிடைப்பது மிகவும் முக்கியமானதொன்று என தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன்,2014 ஆம் ஆண்டு இலங்கைக்கும்-ஜரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வர்த்தக கொடுக்கல் வாங்கள்அமெரிக்க டொலர் மில்லியன்5.07 ஆகவும்.முன்னைய வருடங்களை பார்க்கிலும் அது 3.6 சதவீதமாகும்.ஜீஎஸ்பீ வரிச் சலுகை இலங்கைக்கு கிடைக்கும் போது இலங்கையில் இருந்து ஜரோப்பிய நாடுகளுக்கு செய்யப்படும் ஏற்றுமதியின் அதிகரிப்பு பன்மடங்காகும் எனவும் அமைச்சர் றிசாத் பதீயுதீன் இதன் போது ஜரோப்பிய ஒன்றியத்தின் தலைவரிடத்தில் எடுத்துரைத்தார்.
கடந்த காலத்தில் இலங்கைக்கு கிடைக்காமல் போன ஜீஎஸ்பி வரிச் சலுகை மீண்டும் இலங்கை பெற்றுக் கொள்ளவுள்ளது றிசாத் பதியுதீன் .
Reviewed by NEWMANNAR
on
March 25, 2015
Rating:
No comments:
Post a Comment