ஞானம் அறக்கட்டளை நிதியத்தின் ஸ்தாபகர் சுபாஸ் அல்லிராஜா அவர்களின் பிறந்த தினமான இன்று மன்னாரில் பல நிகழ்வுகள்.
ஞானம் அறக்கட்டளை நிதியத்தின் ஸ்தாபகரும்,லைக்கா மொபைல் நிறுவனத்தின் தலைவருமான சுபாஸ்கரன் அல்லிராஜா அவர்களின் 43 ஆவது பிறந்ததினமான இன்று(2) திங்கட்கிழமை நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றது.
சுபாஸ்கரன் அல்லிராஜா அவர்களின் பிறந்ததித்தையொட்டி மன்னாரில் பல்வேறு நிகழ்வுகள் இன்று(2) திங்கட்கிழமை காலை முதல் இடம் பெற்றது.
ஞானம் அறக்கட்டளை நிதியத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எஸ்.கேதீஸ்வர ராஜ் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம் பெற்றது.
முதலில் சுபாஸ்கரன் அல்லிராஜா அவர்களுக்கு ஆசி வேண்டி காலை 7.30 மணியளவில் மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் விசேட பூசை இடம் பெற்றது.இதன் போது திருக்கேதீஸ்வர சிவன் அருள் இல்ல மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தம்பனைக்குளம் ம.வி பாடசாலையில் தெரிவு செய்யப்பட்ட 7 மாணவர்களுக்கு வங்கிக்கணக்குகள் திறக்கப்பட்டு மாதாந்தம் ஆயிரம்(1000-00) ரூபாய் நிதி கல்வி ஊக்குவிப்புக்காக வைப்பிலிடப்பட்டு வங்கி புத்தகம் மற்றும் கற்றல் உபகரணங்கள் ஆகியவை வழங்கி வைக்கப்பட்டது.
இதே போன்று மன்னார் மாவட்டத்தைச சேர்ந்த சுமார் 200 மாணவர்களுக்கு இவ்வாறு இன்றைய தினம்(2) வங்கிக்கணக்குகள் திறக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தொடர்ச்சியாக வெள்ளப்பெருக்கினால் பாதீக்கப்படும் தம்பளைக்குளம் கிராம மக்கள் தற்போது மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பூ மலர்ந்தான் கிராமத்தில் மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் 275 குடும்பங்களில் முதலில் 100 குடும்பங்களுக்கு தற்காலிக வீடு அமைக்க தேவையான கூரைத்தகரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் உள்ள வயேதிபர் இல்லம் மற்றும் சிறுவர் காப்பகம் ஆகியற்றில் உள்ள அனைவருக்கும் மதிய உணவுகள் வழங்கி வைக்கப்பட்டது.
-குறித்த நிகழ்வுகளில் மடு பிரதேசச் செயலாளர் சத்தியசோதி,ஞானம் அறக்கட்டளை நிதியத்தின் மாவட்ட திட்டமிடல் அலுவலகர் சி.யூலியன்,மடு திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஞானம் அறக்கட்டளை நிதியத்தின் ஸ்தாபகர் சுபாஸ் அல்லிராஜா அவர்களின் பிறந்த தினமான இன்று மன்னாரில் பல நிகழ்வுகள்.
Reviewed by NEWMANNAR
on
March 02, 2015
Rating:
No comments:
Post a Comment