அண்மைய செய்திகள்

recent
-

விமான விபத்து: கருப்பு பெட்டி மீட்பு, அனைவரும் பலி -Photos


பிரான்ஸ் எல்ப்ஸ் மலை தொடரில் வீழ்ந்து விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதோடு விமான விபத்துக்கு தீவிரவாத தாக்குதல் போன்று தெரியவில்லை என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

எல்ப்ஸ் மலை பகுதியின், 6000 அடி உயரத்தில் பொலிசார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பெரிய விமான நிறுவனம், லுப்தான்சா. இதன் துணை நிறுவனமான ‘ஜெர்மனி விங்ஸ்’, குறைந்த கட்டணங்களை கொண்ட விமான சேவையை இயக்கி வருகிறது.

இந்த நிறுவனத்தின் ஏர் பஸ் ஏ-320 ரக விமானம் ஒன்று, ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனியின் டசல்டோர்ப் நகருக்கு உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10.01 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.


விபத்துக்குள்ளான விமானம் 24 ஆண்டுகளாக இயங்கி வந்த விமானம் என்பது குறிப்பிடத்தக்கது. விமானத்தின் சிதைவுகளை பார்சிலோனட் அருகே பிரான்ஸ் ஹெலிகொப்டர்கள் கண்டறிந்தன. இதற்கிடையே விபத்து நடந்த பகுதிக்கு தரை வழியே வாகனங்கள் செல்ல முடியாது என்ற நிலையில் ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று உள்ளனர்.

மீட்பு பணியை தொடங்கி நடைபெற்று வருகிறன்ற. விமானம் விபத்துக்குள் சிக்கியதற்கான காரணத்தை கண்டுபிடிக்க உதவும், கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மலையின் 6000 அடி உயரத்தில் விமானம் விழுந்து நொறுங்கியதால் பயணிகள் யாரும் உயிர்பிழைக்கவில்லை.

ஹெலிகொப்டர் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறன்றன. பிரான்ஸ் விசாரணை குழுவும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

விபத்து நடைபெறுவதற்கு முன்பாக காலை 10.47 மணிக்கு, குறித்த விமானம் 5 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது, விமானத்தில் இருந்து ஆபத்து சமிக்ஞைகள் வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே விமானம் விழுந்துள்ளது.

எனவே விமானத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது போன்று தகவல் தெரியவில்லை என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.



















விமான விபத்து: கருப்பு பெட்டி மீட்பு, அனைவரும் பலி -Photos Reviewed by NEWMANNAR on March 25, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.