அண்மைய செய்திகள்

recent
-

'நன்னீரில் நஞ்சு கலந்த நயவஞ்சகனை கண்டுபிடி': ஏழாலையில் கண்டன பேரணி


ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தில் உள்ள மாணவர்களின் குடி நீர் தாங்கியில் நஞ்சு கலந்தமையை கண்டித்தும் மாணவர்கள் பாதிக்கப்பட்டமை மற்றும் குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் மாபெரும் கண்டனப் பேரணி இன்று வெள்ளிக்கிழமை பகல் இடம்பெற்றது.

தூய நீருக்கான செயலணியின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்த கண்டனப் பேரணியானது ஏழாலை மயிலங்காடு ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தில இருந்து ஆரம்பமாகி சுன்னாகம் புன்னாலைக்கட்டுவன் வீதி வழியாக சுன்னாகம் நகரத்தை அடைந்தது.

இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள், பிரதேச மக்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டதுடன் வட மாகாண சபையின் தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களான த.சித்தார்தன் பா.கஜதீபன் வலி தெற்கு பிரதேச சபைத் தலைவர் தி.பிரகாஸ் எதிர் கட்சி உறுப்பினர் அரிகரன் மற்றும் உறுப்பினர்கள் தமிழ் தேசிய முன்னனியின் செயலாளர் கஜேந்திரன் இடது சாரி கட்சிகளைச் சேர்ந்த செந்திவேல் தமிழ் அழகன் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.

ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் பெற்றோர்கள் நன்னீரில் நஞ்சு கலந்த நயவஞ்சகனை கண்டுப்பிடி' போன்ற பல்வேறு கோசங்கள் அடங்கிய பதாதைகளையும் தாங்கி இருந்தார்கள். சுன்னாகம் பொலிசார் ஊர்வலத்திற்க்கு பாதுகாப்பை வழங்கினார்கள்.
'நன்னீரில் நஞ்சு கலந்த நயவஞ்சகனை கண்டுபிடி': ஏழாலையில் கண்டன பேரணி Reviewed by NEWMANNAR on March 20, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.