ரயில் விபத்து: 30 பேர் பலி
உத்திரபிரதேசம் - ரேபரேலி அருகே அதிவேக ரயில் ஒன்று தடம் புரண்டமையால் 30 பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து உத்திரகாண்ட் மாநிலம் டேராடூனுக்கு சென்று கொண்டிருந்த அதிவேக ரயில் ரேபரேலி அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இதில், ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு ஒன்றின் மீது ஒன்று மோதியதில் 30 பேர் பலியாகியுள்ளனர்.
ஆயினும் தடம் புரண்ட ரயில் பெட்டிகள் கடுமையாக சேதமடைந்துள்ளமையினால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. .
ரயில் விபத்து: 30 பேர் பலி
Reviewed by NEWMANNAR
on
March 20, 2015
Rating:

No comments:
Post a Comment