வடக்கு மாகாண பட்டாதாரி ஆசிரிய நியமனம்; அரசியலுக்கு அப்பால் தகைமைக்கு முன்னுரிமை வழங்கப்படும். அ.அஸ்மின்
கடந்தவாரம் இடம்பெற்ற வடக்கு மாகாண பட்டதாரி ஆசிரிய நியமனத்துக்கான பொதுதேர்வு பரீட்சையினைத் தொடர்ந்து எதிர்வரும் வாரத்தில் அதற்குரிய நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புகள் பரீட்சையில் தகைமையை எய்திய மாணவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதனது விபரங்களை www.np.gov.lk என்னும் இணையத்தளத்தில் காணக்கூடியதாக இருக்கும். இந்நிலையில் குறித்த நேர்முகத் தேர்விற்கு அரசியல் ரீதியான சிபாரிசுகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்கின்ற ஒரு தவறான கருத்து பரிட்சார்த்திகள் மத்தியில் பரப்பப்பட்டுள்ளது.
குறிப்பாக முஸ்லிம் பட்ட்தாரிகளிடம் இக்கருத்து பரப்பப்படுகின்றது. அவ்வாறான எந்தத் தேவையும் அவசியமும் கிடையாது என பரீட்சார்த்திகளுக்கு அறிவிக்க விரும்புகின்றேன், அது மாத்திரமல்ல தாங்கள் நேர்முகப் பரீட்சைக்குச் செல்கின்ற சந்தர்ப்பத்தில் உங்களுடைய தகைமைகளை நிறுவக்கூடிய அனைத்துவிதமான ஆவணங்களையும் உங்களுடன் எடுத்துச் செல்லுமாறும் கேட்டுக்கொள்கின்றேன், நீங்கள் தெரிவு செய்துள்ள துறைசார்ந்து தங்களுக்கு இருக்கும் விஷேட பயிற்சிகளின் சான்றிதழ்கள், குறித்த பாடப்பரப்பில் தாங்கள் கடமையாற்றியுள்ளமையினை நிறுவுகின்ற சான்றிதழ்கள், (experience certificates) என குறித்த விடயதானத்தோடு தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் செல்லுமாறும் நேர்முகத் தேவை மிகச்சிறப்பாக எதிர்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
வடக்கு மாகாணசபை “தகைமைக்கு முதலிடம்” என்னும் அடிப்படையிலேயே நியமனங்களை வழங்கும்; எனவே எவ்விதமான அரசியல் சிபாரிசுகளையும் தாங்கள் பெற்றுக்கொள்ளத் தேவையில்லை என்று அனைவருக்கும் அறியத்தருகின்றேன்.
வடக்கு மாகாண பட்டாதாரி ஆசிரிய நியமனம்; அரசியலுக்கு அப்பால் தகைமைக்கு முன்னுரிமை வழங்கப்படும். அ.அஸ்மின்
Reviewed by NEWMANNAR
on
March 21, 2015
Rating:

No comments:
Post a Comment