அண்மைய செய்திகள்

recent
-

தொண்டர் ஆசிரியர்கள் வடமாகாண கல்வியமைச்சிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்-Photos


யாழ்.மாவட்டத்தில் நீண்டகாலமாக தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றிவரும் ஆசிரியர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறுகோரி இன்றைய தினம் வடமாகாண கல்வியமைச்சிற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றிணை நடத்தியிருக்கின்றனர்.
இன்றைய தினம் காலை 10மணி தொடக்கம் நண்பகல் 12.30மணிவரையில் நடைபெற்றிருந்தது.

இதன்போது தொண்டர் ஆசிரியர்கள் குறிப்பிடுகையில்,

நீண்டகாலம் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றிவரும் எமது நிரந்தர நியமனம் தொடர்பில் பல தரப்பினரிடமும், கோரிக்கை விடுத்தபோதும் அது தொடர்பில் பொறுப்புவாய்ந்தவர்கள் எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்லை.

இந்நிலையில் மற்றய துறைகளில் 180நாள்கள் வேலை செய்த தொண்டர் ஊழியர்களுக்கெல்லாம் நிரந்தர நியமனம் வழங்கப்படும் நிலையில், தொண்டர் ஆசிரியர்கள் மட்டும் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டியி ருந்தனர்.

குறித்த தொண்டர் ஆசிரியர்கள் மாகாண கல்வியமைச்சர் த.குருகுலராஜாவுடன் சந்தித்து பேச்சுவார்த்தையும் நடத்தியிருந்தனர்.

இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக தொண்டர் ஆசிரியர்கள் குறிப்பிடுகையில், யாழ்.மாவட்டத்தில் 350ற்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் உள்ளபோதும் அவர்களுடைய நியமனம் குறித்து கரிசணை செலுத்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியிருந்தோம்.

எனினும் அதற்குப் பதிலளித்த அமைச்சர், நியமனம் வழங்குவதற்கு நாம் எதிரானவர் அல்ல என கூறியதுடன், மத்திய அரசாங்கத்திடமே அந்தப் பொறுப்பு உள்ள நிலையில் இது தொடர்பாக நாம் மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்போம் எனவும்,

அதனடிப்படையில் எதிர்காலத்தில் வடமாகாணத்திலுள்ள கல்வி வலயங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை அறிந்து அதனை நிவர்த்தி செய்ய முயற்சிப்போம் எனவும் கூறியதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சுமார் 2மணிநேரத்தின் பின்னர் அமைச்சரின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு விலகிச் சென்றுள்ளனர்.




தொண்டர் ஆசிரியர்கள் வடமாகாண கல்வியமைச்சிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்-Photos Reviewed by NEWMANNAR on March 25, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.