முசலி மண்ணில் முதன் முதலாக பிரதேச கலை இலக்கிய விழா-2015-Photos
மன்னார் மண்ணின் பெருமை பேசுகின்ற ஐந்து பிரதேச செயலகங்களில் மன்னார்-மாந்தை-மடு-முசலி நானாட்டான் ஆகியனவற்றிலே இருபத்தியாறு கிராமசேவையாளர்பிரிவுகளைக்கொண்ட நூறு அழகிய கிராமங்களை தன்னகத்தே கொண்டு தரணியில் புகழ் வீசிடும் முத்தரிப்புத்துறை முசலியாகும்.
உலகின் ஆதிநாகரிக பிரதேசங்களில் சிலாபத்துறை முத்தரிப்புத்துறை முத்துக்குளிப்பு பழமையானது எயn-1888 அறிஞர் கருத்து. எகிப்தின் பேரழகி கிளியோபத்திராவின் மணிமுடியில் அலங்கரித்த முத்து சிலாபத்துறை முத்துத்தான் என்கிறது சரித்திரம்.
வயல்-காட்டுவளம்-கடல் வளம்-வில்பத்து காட்டுப்பகுதி அல்லிராணிக்கோட்டை அருவியாற்றுப்படுக்கை தெப்பம் சிறப்பின் ஊடே பல்லின சமூகமாய் 6933 குடும்பங்களுக்கு மேல் அழகாய் அமைதியாய் வாழ்ந்து வருகின்ற நீண்ட வரலாற்றை உடைய முசலி பிரதேசத்தில் தான் முதன் முறையாக பிரதேச இலக்கிய விழா முப்பெரும் விழாவாக 27-01-2015 அன்று “நித்திலம் விழா மலர் வெளியீடும் பிரதேசகீதம் இறுவட்டு வெளியீடும் கலைஞர்கள் கௌரவிப்பும் பிரதேச செயலாளர் திரு.செ.கேதீஸ்வரன் தலமையில் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.க.ரூபன் கனியூட் கயல்விழி அவர்களின் முயற்சியினால் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
முசலி மண்ணில் முதன் முதலாக பிரதேச கலை இலக்கிய விழா-2015-Photos
Reviewed by NEWMANNAR
on
March 18, 2015
Rating:
No comments:
Post a Comment