மன்னார் மாவட்ட ஆயுர்வேத பாதுகாப்புச்சபையின் கலந்துரையாடல் -Photos
மன்னார் மாவட்ட ஆயுர்வேத பாதுகாப்புச்சபையின் 16 வது கலந்துரையாடல் இன்று 12-03-2015 வியாழக்கிழமை காலை 10-00 மணிக்கு மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் தலைவர் வைத்தியர் எஸ். செல்வமகேந்திரன் தலமையில் நடைபெற்றது.
விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.தேசப்பிரிய அவர்களும் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டிமெல் அவர்களும் லங்கா சித்த ஆயுள்வேத மருத்துவக்கல்லூயின் அaதிபர் வைத்தியர் ஜீவகுமார் அவர்களும் வட இலங்கை சுதேச வைத்திய சங்கத் தலைவர் வைத்தியர் விக்னேஸ்வரன் அவர்களும் மன்னார் மாவட்ட சுதேச வைத்திய இணைப்பாளர் வைத்தியர் கார்த்தியாகினி அவர்களோடு மன்னார் மாவட்ட ஆயுர்வேத பாதுகாப்புச்சபையின் பொருளாளர் சமாதானநீதவான் வைத்தியர் எஸ்.லோகநாதன் அவர்கள் விருந்தினர்களை வரவேற்று வரவேற்புரையாற்றினார்.
சித்த ஆயுர்வேதம் நன்மையும் அதன் பெருமையும் மன்னார் மண்ணின் பிரதான இடங்களில் தனியான சித்த ஆயுர்வேத வைத்தியசாலை அமைக்கவேண்டும் அதன் தாற்பரியம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன கலந்துரையாடப்படடது.
மன்னார் மாவட்ட ஆயுர்வேத பாதுகாப்புச்சபையின் கலந்துரையாடல் -Photos
Reviewed by NEWMANNAR
on
March 20, 2015
Rating:
No comments:
Post a Comment