அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மடுக்கரை புண்ணிய கிராம நிகழ்வு -Photos


இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளரின் (அறநெறி) தொலைபேசி அறிவித்தலுக்கமைவாக இந்நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது.

இந்நிகழ்வு ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ விநாயகர் ஆலய பரிபாலன சபை மற்றும் மன்னார் இந்து இளைஞர் மன்றத்தின் உதவியுடன் மன்னார் மாவட்ட நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவு மடுக்கரைக் கிராம இந்துக் குடும்பங்களையும் அக்கிராமத்தைச் சேர்ந்த அம்பாள் அறநெறிப் பாடசாலை  மாணவர்களையும் இணைத்து 2015.03.01ஆம் திகதி மு.ப 10.00 மணி தொடக்கம் மாலை வரையில் ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் புண்ணிய கிராம நிகழ்வு நடைபெற்றது.

விழாவானது ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பூசகரின் பூஜை நிகழ்வுடன் ஆரம்பமாகி தொடர்ந்து சுமார் 700 மீற்றர் ஊர்வலமாக நடந்து ஸ்ரீ விநாயகர் ஆலயத்திற்கு வந்து வாயிலில் விருந்தினருக்கு மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு நந்திக்கொடி ஏற்றலுடன் அவ்வாலயத்திலும் ஆகம பூஜை நடைபெற்று பின்னர் மேடை நிகழ்வுகளாக மங்கல விளக்கேற்றல் இறைவணக்கம் வரவேற்புரைஇ தலைமை உரை சொற்பொழிவுகள் பிரதமவிருந்தினர் உரை சிறப்புவிருந்தினர் உரை என்பன இடம்பெற்று இடையே அன்னதானமும் வழங்கப்பட்டு தொடர்ந்து அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்று இறுதியாக நன்றியுரை மற்றும் இறைவணக்கத்துடன் 4.00 மணியளவில் நிறைவு பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதமவிருந்தினராக மன்னார் மாவட்டச் செயலாளரை அழைத்திருந்தபோது அவருக்கு அன்று வேறு வேலை அமைந்ததன் காரணமாக சமூகமளிக்க முடியவில்லை சிறப்பு விருந்தினராக நானாட்டான் பிரதேச செயலாளர் திரு.எம்.பரமதாசன் அவர்களும் விசேட விருந்தினர்களாக அறநெறிப் பாடசாலைகளின் இணையத்தின் தலைவர் வண.சிவஸ்ரீ மஹா தர்மகுமாரக்குருக்கள்இ நலிவுற்றோர் நலன் காப்பு நிதியத்தின் நிதிச் செயலாளர் திரு.பிருந்தாவனம் அவர்களும் சொற்பொழிவாளர்களாக வண.சுதர்சனசர்மா (விஞ்ஞானமும் மெஞ்ஞானமும்) சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியின் ஆசிரியர் திரு.சோ.றோகண்ராஜ் (மூத்தோர் வாக்குப் பொய்யா) அவர்களும் இவர்களுடன் மன்ஃசித்திவிநாயகர் இந்துக் கல்லூரியின் அதிபரும் மன்னார் மாவட்டத்தின் சில இந்து நிறுவனங்களின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் குறித்த கிராமத்தைச் சேர்ந்த இந்துக்கள் 500 ற்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்து பயன் பெற்றனர்.

அன்றைய தினம் மாலை 6.30 மணியிலிருந்து நள்ளிரவு வரை அக்கிராம இளைஞர்களால் பாரம்பரியக் கலை வடிவங்களான நாடகம் காத்தவராயன் கூத்து உட்பட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.












மன்னார் மடுக்கரை புண்ணிய கிராம நிகழ்வு -Photos Reviewed by NEWMANNAR on March 20, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.