உப்புக்குள சித்தி விநாயகர் ஆலய சொற்பொழிவு-Photos
மன்னார் மாவட்ட, மன்னார் பிரதேச செயலகப் பிரிவு, உப்புக்குளம் கிராம இந்துக் குடும்பங்களையும் சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை மாணவர்களையும் இணைத்து, 2015.02.22ஆம் திகதி பி.ப 8.00 மணியளவில் சித்தி விநாயகர் ஆலயத்தில் சொற்பொழிவு நடைபெற்றது.
இவ்வாலயத்தில் வருடாந்த திருவிழா நடைபெறுவதால் அயற்கிராம இந்து மக்களும் பூஜை நிகழ்வில் கலந்துகொள்வதையும், பக்தர்களின் வருகையின் எண்ணிக்கையையும் சாதகமாகக் கொண்டு இத்திகதியினை நான் தெரிவு செய்தேன்.
ஆலயத்தில் மாலைப்பூசை நிறைவடைந்த பின்னர் சொற்பொழிவு பி.ப 8.00 மணியளவில் ஆரம்பமாகி தொடர்ந்து 45 நிமிடங்கள் இடம்பெற்றது.
சொற்பொழிவாளராக யாழ்/மெதடிஸ்த பெண்கள் உயர்தரப்பாடசாலை ஆசிரியர் திரு.பரா ரதீஸ் அவர்கள் கலந்துகொண்டு “எற்றே இவர்க்கு நாம்” என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
மேற்குறிப்பிட்டது போல் உப்புக்குளம்; கிராம இந்துக் குடும்பங்களும், சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை மாணவர்களும் அயற்கிராம இந்து மக்களும் இணைந்து சுமார் 150 பேருக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
உப்புக்குள சித்தி விநாயகர் ஆலய சொற்பொழிவு-Photos
Reviewed by NEWMANNAR
on
March 19, 2015
Rating:

No comments:
Post a Comment