அண்மைய செய்திகள்

recent
-

இந்து ஆலயங்களின் பரிபாலனம் தொடர்பான வழிகாட்டிக் கைநூல் வெளியீட்டு நிகழ்வு-Photos




இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளரினால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திற்கமைவாக இந் நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இலங்கையிலுள்ள இந்து ஆலயங்களின் பரிபாலனத்தை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்காக ஆலய நிர்வாகசபையினருக்கு வழங்கும் நோக்குடன் அச்சிட்டுள்ளகைநூலை மாவட்டரீதியில் ஒவ்வொரு ஆலயத்திற்கும் விநியோகிக்கும் நிகழ்வுகளில்,மன்னார் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட இந்து ஆலயங்களுக்கு விநியோகிக்கும் நிகழ்வு உதவிப் பணிப்பாளரின் தலைமையில் 2015.03.08 ஆம் திகதி மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.

இந் நிகழ்வு காலை 9.30 மணியளவில் நந்திக்கொடி ஏற்றலுடன் ஆரம்பமாகி தொடர்ந்து தலைவர் உட்பட விருந்தினர் மலர் மாலை அணிவித்து மண்டபத்தினுள் வரவேற்கப்பட்டு ,மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம்,வரவேற்புரை,தலைமைஉரை, இரண்டுசிறப்புச் சொற்பொழிவுகள்,பிரதமவிருந்தினர் உரை,சிறப்புவிருந்தினர் உரை,நூல் வெளியீடு,நூல் விநியோகம் என்பன இடம்பெற்று தொடர்ந்து ஆலயபரிபாலன சபையையினரின் கருத்துக்களும் பரிமாறப்பட்டு இறுதியாக நன்றியுரை மற்றும் இறைவணக்கத்துடன் 12.30 மணியளவில் நிறைவுபெற்றது.

இவ் விழாவிற்கு பிரதம விருந்தினராக மன்னார் பிரதேச செயலாளர் திரு.கே.எஸ்.வசந்தகுமார் அவர்களும் சிறப்பு விருந்தினராக திருமதி.கனகாம்பிகைசிவசம்பு அவர்களும் சொற்பொழிவாளர்களாக அறநெறிப் பாடசாலைகளின் இணையத்தின் தலைவர் வண.சிவஸ்ரீ மஹாதர்ம குமாரக்குருக்கள் (ஆலயபரிபாலனம்),சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியின் ஆசிரியர் திரு.சோ.றோகண்ராஜ் (ஆலயமும் சமூகமும்)அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இவர்களுடன் குறித்தகல்லூரியின் அதிபரும் மன்னார் மாவட்டத்தின் சில இந்து நிறுவனங்களின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் இந் நிகழ்வுக்கு ஆலயப்பரிபாலன சபையினர் 114 பேர் வருகைதந்து பயன் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

…………………. ………………….
ஆ.ஜீவிதா லி.சுபேந்தினி
அபிவிருத்திஉத்தியோகத்தர் (இ.க)
மாவட்டசெயலகம், பிரதேசசெயலகம்,
மன்னார். மாந்தைமேற்கு.





இந்து ஆலயங்களின் பரிபாலனம் தொடர்பான வழிகாட்டிக் கைநூல் வெளியீட்டு நிகழ்வு-Photos Reviewed by NEWMANNAR on March 19, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.