அண்மைய செய்திகள்

recent
-

விமான விபத்து : துணை விமானி வீட்டில் சோதனை: முக்கிய ஆதாரங்கள் சிக்கின


ஜெர்மனி விமான விபத்து தொடர்பாக துணை விமானி வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது முக்கிய ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஜெர்மனியின் லுப்தான்சா விமான நிறுவனத்தின் ‘ஜெர்மன் விங்ஸ்’ ஏர் பஸ் ஏ-320 விமானம், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனியின் டசல்டோர்ப் நகருக்கு கடந்த 24ஆம் திகதி 150 பேருடன் சென்றபோது விபத்துக்குள்ளானது.

பிரான்ஸ் நாட்டில் எல்ப்ஸ் மலையின் தென்பகுதியில், செய்ன் லெஸ் எல்ப்ஸ் என்ற கிராமத்துக்கு அருகே குறித்த விமானம் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த 150 பேரும் உயிரிழந்தனர்.

அவர்களில் 72 பேர் ஜெர்மனியர்கள், 51 பேர் ஸ்பெயின் நாட்டினர், 3 பேர் அமெரிக்கர்கள். இங்கிலாந்து, ஆர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, பெல்ஜியம், கொலம்பியா, டென்மார்க், இஸ்ரேல், ஜப்பான், மெக்சிகோ, ஈரான், நெதர்லாந்து, மொராக்கோ நாட்டினரும் பலியானவர்களில் அடங்குவர்.

துணை விமானி ஹென்ட்ரூஸ் லூபிட்ஸ் ஜெர்மனியின் பிராங்க்போர்ட் நகருக்கு அருகே உள்ள மொன்டபாரில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். டுசல்டோர்ப் நகரிலும் அவருக்கு ஒரு வீடு இருந்துள்ளது. அவருக்கு ஒரு காதலியும் இருக்கிறார்.

இந்நிலையில் ஜெர்மனி பொலிசார் மொன்டபாரில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

இதன்போது குறித்த வீட்டில் இருந்த லுபிட்ஸின் பொருட்கள் மற்றும் கணனி ஆகியவற்றை பொலிசார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் சோதனையின் போது முக்கியமான இரகிசிய தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். எனினும் அத் தகவல்கள் குறித்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்த துணை விமானி லுபிட்ஸ{க்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு எதுவும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.

விமான விபத்து : துணை விமானி வீட்டில் சோதனை: முக்கிய ஆதாரங்கள் சிக்கின Reviewed by NEWMANNAR on March 27, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.