அண்மைய செய்திகள்

recent
-

ஓசோன் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பினால் சூழலில் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் மன்னாரில் விசேட நிகழ்ச்சித்திட்டம்.-Photos


ஓசோன் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பினால் சூழலில் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் அறிவுரை வழங்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை(27) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமேல் தலைமையில் இடம் பெற்றது.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் தேசிய ஓசோன் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட குறித்த நிகழ்ச்சித்திட்டத்தில் மன்னார் மாவட்ட வன அலுவலகர் எம்.ஏ.கே.ஜெயக்கொடி,சுற்றாடல் அமைச்சின் புதுப்பித்தல் சக்தி பிரிவு இயக்குனர் ஜனக்க குணரத்தின,அரச,தனியார் நிறுனங்களின் பிரதி நிதிகள்,திணைக்களத்தலைவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது ஓசோன் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பினால் சூழலில் ஏற்படக்கூடிய பாதீப்புக்கள் தொடர்பிலும் அவற்றை நிவர்த்தி செய்யக்கூடிய வழிமுறைகள் குறித்தும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.








ஓசோன் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பினால் சூழலில் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் மன்னாரில் விசேட நிகழ்ச்சித்திட்டம்.-Photos Reviewed by NEWMANNAR on March 27, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.