நாடளாவிய ரீதியில் அரச வைத்தியர்கள் அடையாள வேலை நிறுத்தம்!
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 6ஆம் திகதி அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2015ம் ஆண்டு வரவு செலவு திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வுகள் இன்னும் வழங்கப்படாமையை கண்டித்தே வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பேராதெனிய லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனை, காசல் வீதி மகளிர் மருத்துவமனை, டி சொய்சா மகப்பேற்று வைத்தியசாலை மற்றும் மஹரகம புற்றுநோய் நிறுவனம் மாத்திரம் வழமை போன்று இயங்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில் அவசர உதவி சேவைகள் மட்டுமே வழங்கப்படும் எனவும் குறிப்படப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் அரச வைத்தியர்கள் அடையாள வேலை நிறுத்தம்!
Reviewed by NEWMANNAR
on
March 01, 2015
Rating:

No comments:
Post a Comment