அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் உப்புக்குளம் புதுத்தெரு பகுதி மக்களின் அவல நிலை.-Photos


மன்னார் உப்புக்குளம் புதுத்தெரு பகுதியில் உள்ள உள்ளக வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாமையினால் குறித்த வீதி பாரிய குண்றும் குழியுமாக காணப்படுவதாகவும்,தற்போது குறித்த வீதியில் மழை நீர் தேங்கி உள்ளமையினால் அப்பகுதி மக்கள பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

-குறித்த வீதிக்கு மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.பிரிந்தாவனநாதன் அவர்களின் தனிப்பட்ட முயற்சியினால் 3 லோட் மண் கொட்டப்பட்டது.இதனால் அவ்வீதி சற்று சமப்படுத்தப்பட்டது.

-எனினும் குறித்த வீதியின் அவல நிலை குறித்து பல தடவைகள் மன்னார் நகர சபையிடம் நேரடியாகவும்,எழுத்து மூலமாகவும் தெரியப்படுத்தியும் இது வரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

-தற்போது மழை பெய்வதினால் குறித்த வீதியில் தேங்கி நிற்கும் மழை நீர் அருகாமையில் உள்ள வீடுகளுக்குள் செல்லுகின்றமையினால் அந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

-வீடுகளுக்குள் தேஙய்கியுள்ள மழை நீரை வெளியேற்ற முடியாமையினால் நுளம்பின் பெறுக்கம் அதிகரிக்கும் நிலையும் ஏற்படுவதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
-வருடா வருடம் இப்பிரச்சினை ஏற்படுகின்ற போதும் அதிகாரிகள் தொடர்ந்தும் அசமந்த போக்குடன் நடந்து கொள்ளுகின்றனர்.

-எனவே சுமார் 100 மீற்றர் கொண்ட குறித்த வீதியை புனரமைத்து அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வழிவகுக்க மன்னார் நகர சபை மற்றும் வடமாகாண வீதி,போக்குவரத்து அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








மன்னார் உப்புக்குளம் புதுத்தெரு பகுதி மக்களின் அவல நிலை.-Photos Reviewed by NEWMANNAR on March 29, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.