அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலை ஆசிரியர் விடுதி திறந்து வைப்பு.- Photos
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மன்-அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலையின் ஆசிரியர் விடுதி இன்று ஞாயிற்றுக்கிழமை(26) காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியர் விடுதியினை வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன்,வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.
இதன் போது குறித்த நிகழ்விற்கு மடு வலய கல்விப்பணிப்பாளர்,திணைக்கள அதிகாரிகள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலை ஆசிரியர் விடுதி திறந்து வைப்பு.- Photos
Reviewed by NEWMANNAR
on
April 26, 2015
Rating:

No comments:
Post a Comment