பேசாலை-நடுக்குடா வீதியில் விபத்து-ஒருவர் பலி
மன்னார் – பேசாலை நடுக்குடா பகுதியில் நேற்று(1) புதன் கிழமை இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ள நிலையில் பேசாலை மற்றும் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் பகுதியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பயணித்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் குறித்த முச்சக்கர வண்டி பயணித்துக்கொண்டிருந்த போது பேசாலை நடுக்குடா பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியினை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன்போது முச்சகர வண்டியில் பயணித்த திரேசம்மா (வயது-80) வயோதிப தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்றவர் சிறு காயங்களுடன் பேசாலை வைத்தியசாலையிலும் அவரது மனைவி காயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டியில் பயணித்த சிறுமி காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.உயிரிழந்த வயோதிப தாயின் சடலம் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பேசாலை-நடுக்குடா வீதியில் விபத்து-ஒருவர் பலி
Reviewed by NEWMANNAR
on
April 02, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 02, 2015
Rating:

No comments:
Post a Comment