கொழும்பிலிருந்து தலைமன்னாருக்கான ரயில் சேவை 25 வருடங்களின் பின்னர் இன்று ஆரம்பமானது
கொழும்பிலிருந்து தலைமன்னாருக்கான ரயில் சேவை 25 வருடங்களின் பின்னர் இன்று ஆரம்பமானது.
25 வருடங்களின் பின்னர் கொழும்பிலிருந்து தலைமன்னாருக்கான ரயில் சேவை இன்று ஆரம்பமாகவுள்ளது.
இதற்கமைய முதலாவது ரயில் இன்றிரவு 7.40 க்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து தலைமன்னாருக்கான பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.
கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமன்னார் வரையான ரயில் பாதையை திறந்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, களனிவெளி ரயில் மார்க்கத்தின் ஹோமாகம ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை இன்று காலை 7.20 க்கு புதிய ரயில் ஒன்று சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டது.
கொழும்பிலிருந்து தலைமன்னாருக்கான ரயில் சேவை 25 வருடங்களின் பின்னர் இன்று ஆரம்பமானது
Reviewed by NEWMANNAR
on
April 01, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 01, 2015
Rating:


No comments:
Post a Comment