மன்னார் மாவட்ட நிலங்களை கையளிப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்-Video
மன்னார் மாவட்டத்திலுள்ள நிலங்களை மீண்டும் மக்களுக்கு கையளிப்பது தொடர்பிலும் மக்களை மீளக்குடியேற்றுவது தொடர்பிலும் விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது.
நிலங்கள் அடையாளம் காண்பதை முக்கிய இலக்காக கொண்டு, ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (02) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
மாவட்ட செயலகங்களுக்கு கீழ் உள்ள நிலங்களை இந்த நடவடிக்கைக்காக பயன்படுத்துமாறும் ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நிலங்களை பகிர்ந்தளிக்கும் போது வளங்களை பாதுகாப்பது மற்றும் பராமரிப்பது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.
சுமார் 1734 குடும்பங்கள் மன்னார் மாவட்டத்தில் நிலம் தொடர்பில் கோரிக்கை விடுத்திருந்ததுடன் அவற்றில் 902 குடும்பங்கள் நிலங்களை பெறுவதற்கு உரித்துடையனவாகியுள்ளன.
மன்னார் மாவட்ட நிலங்களை கையளிப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்-Video
Reviewed by NEWMANNAR
on
April 03, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 03, 2015
Rating:


No comments:
Post a Comment