மடு பூமலர்ந்தான் கிராம வீடமைப்புத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு.-Photos
புதிய அரசாங்கத்தின் 100 நாள் துரித வேலைத்திட்டத்தின்கீழ் நாடு பூராகவும் 50000 ஆயிரம் வீடமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டம் மடு பிரதேச செயலாளர் பிரிவில் பூமலர்ந்தான் மீள் குடியேற்ற வீடமைப்புத்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை(07) மன்னார் மாவட்ட அரச அதிபர் எம்.வை.எஸ். தேசப்பிரிய தலைமையில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மடு பிரதேச செயலாளர் எஸ்.சத்திய சோதி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் எம்.றியாஸ் திவிநெகும திணைக்களப்பணிப்பாளர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மாவட்ட இணைப்பாளர், முகாமையாளர்,நானாட்டான் பிரதேச சபை தலைவர் அன்புராஜ் லெம்பேட் மற்றும் மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பல உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
பூமலர்ந்தான் கிராமத்தில் 253 வீடுகள் அமைக்கப்படவுள்ளது.குறித்த கிராமத்திற்கு முதற்கட்டமாக இரண்டு வீடுகளுக்கான அடிக்கல் வைபவ ரீதியாக நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பயனாளிகள் தம்பனைக்குளம் கிராமத்தில் வாழ்ந்து வந்தவர்கள். வருடம் தோறும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் பூமலந்தான் கிராமத்தில் மீள் குடியேற்றப்படுகின்றனர்.
இதே வேளை குறித்த கிராம மக்களின் வீடமைப்பிற்காக குறைந்த வட்டியில் ஒரு இலட்சம் ரூபாய் கடனுதவி தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மடு பூமலர்ந்தான் கிராம வீடமைப்புத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
April 08, 2015
Rating:

No comments:
Post a Comment