அண்மைய செய்திகள்

recent
-

நல்­லி­ணக்கம் இல்­லா­விடின் தேசிய ஐக்­கியம் ஏற்­ப­டாது நல்­லி­ணக்கம் ஏற்­ப­டா­விட்டால் இலங்­கையில் தேசிய ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்தும் அர­சாங்­கத்தின் முயற்­சிகள் தோல்­வி­ய­டையும்


நல்­லி­ணக்கம் இல்­லா­விடின் தேசிய ஐக்­கியம் ஏற்­ப­டாது நல்­லி­ணக்கம் ஏற்­ப­டா­விட்டால் இலங்­கையில் தேசிய ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்தும் அர­சாங்­கத்தின் முயற்­சிகள் தோல்­வி­ய­டையும் என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க தெரி­வித்­துள்ளார்.

 'இந்து'பத்­தி­ரி­கைக்கு வழங்­கி­யுள்ள பேட்­டி­யி­லேயே முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க இதனை குறிப்­பிட்­டுள்ளார். அதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, நல்­லி­ணக்கம் ஏற்­ப­டா­விட்டால் இலங்­கையில் தேசிய ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்தும் அர­சாங்­கத்தின் முயற்­சிகள் தோல்­வி­ய­டையும்.இதுவே மிக முக்­கியமான விடயம் என நான் கரு­து­கிறேன். சமீ­பத்தில் உரு­வாக்­கப்­பட்ட நல்­லி­ணக்­கத்­திற்­கான ஜனா­தி­பதி செய­ல­ணியை தேசிய ஐக்­கி­யம்­மற்றும் நல்­லி­ணக்­கத்­திற்­கான நிரந்­தர அலு­வ­ல­க­மாக மாற்­ற­வுள்ளோம். இந்த விட­யத்தில் சர்­வ­தேச சமூகம் எமக்கு வழங்­கி­யுள்ள உத­வி­க­ளினால் நாங்கள் ஊக்­க­ம­டைந்­துள்ளோம். இலங்கை தற்­போது நாட்டின் வெளி­வி­வ­கார கொள்­கையை சீர­மைத்­து­வ­ரு­கின்­றது. முன்­னைய அர­சாங்கம் இந்­தி­யா­வு­ட­னான உற­வு­களை முற்­றாக சீர்­கு­லைத்­துள்­ளதை தொடர்ந்து அதனை சரி­செய்­வ­தற்கு, நல்­லு­றவை மீள ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இலங்கை தீவிர முயற்­சி­களை மேற்­கொண்­டுள்­ளது. இலங்­கையில் புதிய அர­சாங்கம் ஆட்­சி­பொ­றுப்­பை­யேற்று இரண்டு மாதங்­க­ளுக்குள் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்டார். இதன் மூல­மாக நட்­பு­றவு பற்­றிய வலு­வான செய்­தி­யொன்றை அவர் எங்­க­ளுக்கு வழங்­கி­யுள்ளார். மஹிந்த ராஜ­பக்­சவை அவ­ரது மோச­மான ஆட்­சிக்­கா­கவே மக்கள் தோற்­க­டித்­தனர். அவ­ரது ஆட்­சியில்,அவ­ரது குடும்­பத்தின் ஊழல்,மனித உரி­மைகள் இல்­லாத நிலை,சில கொலைகள் மற்றும் ஓட்­டு­மொத்­தத்தில் சுதந்­திரம் இல்­லா­த­நிலை காணப்­பட்­டது. ராஜ­பக்ச தோற்­க­டிக்­கப்­பட்ட பின்னர் நாங்கள் அனு­ப­விக்­கின்ற சுதந்­திர உணர்வு மிகப்­பெ­ரி­யது என அவ­ரது முன்னாள் அமைச்­சர்­களே தெரி­விக்­கின்­றனர். இது பொலிஸ் நாடாக இருந்­தது. அதனை மக்கள் கவிழ்த்­துள்­ளனர். இலங்­கையில் புதிய அர­சாங்கம் ஆட்­சிப்­பொ­றுப்பை ஏற்ற பின்னர் அதற்கும் தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்­பிற்கும் இடையில் அற்­பு­த­மான உறவு நில­வு­கின்­றது. தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்­பினர் தங்கள் அடை­யா­ளத்தை காப்பாற்றுவதற்காக அவ்வப்போது உரத்துக் குரலெழுப்புவார்கள். ஆனால் எங்கள் மத்தியில் சிறந்த உறவு காணப்படுகின்றது. நான் நிச்சயமாக மீண்டும் அரசியலுக்குள் நுழைய மாட்டேன், அது அசிங்கமான விடயம். ஆனால் எனது மகன் குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது.
நல்­லி­ணக்கம் இல்­லா­விடின் தேசிய ஐக்­கியம் ஏற்­ப­டாது நல்­லி­ணக்கம் ஏற்­ப­டா­விட்டால் இலங்­கையில் தேசிய ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்தும் அர­சாங்­கத்தின் முயற்­சிகள் தோல்­வி­ய­டையும் Reviewed by Author on April 04, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.