வண்ணமயமாக நடந்த ஐ.பி.எல். தொடக்கவிழா
கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ஐ.பி.எல். தொடக்க விழா கொல்கத்தாவில் நேற்று இரவு பிரமாண்டமாக நடந்தது. 8ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று முதல் மே 24ஆம் திகதி வரை 47 நாட்கள் இந்தியாவில் உள்ள 12 நகரங்களில் நடக்கிறது. உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் அதிரடி ஆட்டத்தின் மூலம் கிரிக்கெட் ரசிகர்களின் மனதை ஆட்டிப் படைக்க இருக்கும் வித்தியாசமான ஐ.பி.எல். திருவிழாவின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸூம்இ மும்பை இந்தியன்ஸூம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு மோதுகின்றன. போட்டிக்கு ஒரு நாளுக்கு முன்பாக நேற்று கொல்கத்தா சால்ட்லேக் மைதானத்தில் பிரமாண்டமான தொடக்க விழா அரங்கேறியது. இரவு 7.30 மணிக்கு ஆரம்பமான தொடக்க விழாவில் பிரபலங்களின் கண்கவர் நடனம், கலை நிகழ்ச்சி, லேசர் ஒளி வெள்ளத்தில் இன்னிசை விருந்து என்று மொத்தம் 2 மணி நேரம் மைதானம் குதூகலத்தில் மிதந்தது. பிரமிப்பூட்டும் வகையில் நடத்தப்பட்ட தொடக்க விழா இந்தி நடிகையும், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் காதலியுமான அனுஷ்கா சர்மா, இந்திப்பட நட்சத்திரங்கள் ஹிருத்திக் ரோஷன், சாகித் கபூர், பர்ஹான் அக்தர் ஆகியோரின் நடனத்துடன மேலும் களைகட்டியது. ஹிந்தி நடிகர் சயீப் அலி கான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தொடக்க விழாவின் முக்கிய நிகழ்வாக போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளின் தலைவர்களும் மேடையில் தோன்றினார். 8ஆவது ஐ.பி.எல். போட்டி தொடங்குவதை குறிக்கும் வகையில் நடப்பு சம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் கவுதம் கம்பீர் கிண்ணத்தை விழா மேடையில் வைத்தார்.
அணிகள் விவரம்: டில்லி: கடந்த இரண்டு பருவகாலத்தில் புள்ளிகள் பட்டியலில் பின்தங்கியிருந்த டில்லி அணி, இந்த முறை புதிய வீரர்கள், புதிய கேப்டன் என முற்றிலும் மாறுபட்ட அணியாக களம் காண்கிறது. தென் ஆப் பிரிக்காவின் Nஜபி டுமினி தலைமையில் பாகிஸ்தானில் பிறந்து தென் ஆபிரிக்காவுக் காக ஆடி வரும் இம்ரான் தாஹிர், ஜகீர் கான், முகமது 'மி ஆகியோர் பந்துவீச்சில் சாதிக்க காத்திருக்கின்றனர். துடுப்பாட்டத் தில் யுவராஜ் , இலங்கையின் அஞ்சலோ மெத் யு+ஸ் ஆகியோர் nஜhலிக்க வாய்ப்புள்ளது. ஆனால், சென்னையில் விளையாட இலங்கை வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், ஏப்ரல் 9-ஆம் திகதி சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் மெத்யு+ஸ் களமிறங்க மாட்டார். இது டில்லி அணிக்கு பின்னடைவே. பெங்க@ர்: 2009, 2011 ஆகிய பருவகலத் தில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய பெங் க@ர் அணியில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற வீரர்கள் நிரம்பி வழிகின்றனர். கிறிஸ் கெயில், விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் என டொப் ஆர்டர் துடுப்பாட்டத்துக்கு இதை விட வேறு சிறந்த வீரர்கள் கிடைக்க வாய்ப் பில்லை. இவர்களுடன் ரூ.10.5 கோடிக்கு வாங்கப்பட்ட தினேஷ் கார்த்திக்கும் மத்திய வரிசையில் வலு சேர்க்க உள்ளார். பந்து வீச்சு வரிசையில் அசோக் டிண்டா, வருண் ஆரோன் ஆகியோரையை அந்த அணி பெரி தும் நம்பியுள்ளது.உலகக் கோப்பைத் தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற மிச்செல் ஸ்டார்க் காயம் காரணமாக மூன்று வாரம் ஓய்வில் இருப்பது அணிக்கு பலவீனமே. சென்னை: ஏழு தொடர்களில் கடைசி நான்கு தொடர்களில் தொடர்ந்து அரையிறு திக்கு முன்னேறியது, நான்கு முறை இறுதி ஆட்டத்தில் பங்கேற்றது, அதில் இரண்டு முறை (2010, 2011) பட்டம் வென்றது என சென்னை அணிதான், ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக சிறந்த ஆட் டத்தை வெளிப் படுத்தி வரு கிறது. ஆனால், குருநாத் மெய்யப்பன் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, அணி நிர்வாகம் உரிமை மாற்றம் என களத்துக்கு வெளியே அந்த அணி ஏரா ளமான சிக்கல்களைச் சந் தித்த போதிலும், தோனி யின் மீது நம்பிக்கை வைத்து காத்திருக்கிறது ரசிகர்கள் பட்டாளம். தக்க வைக்கப் பட்ட வீரர்கள் தவிர்த்து இந்த முறை சகல துறைவீரர் இர்/பான் பதான், மைக்கல் ஹஸி, ராகுல் 'ர்மா, கைல் அபோட் என திறமை யான வீரர்கள் அணியில் இணைந் திருப்பது பலம். கொல்கத்தா: நடப்பு சம்பி யன் என்றாலும், அணியின் முக்கிய பந்து வீச்சாளரான சுனில் நரைன் இந்தத் தொடரில் பங்கேற்க பிசிசிஐ அனு மதி வழங்குமா, வழங்காதா? என விழி பிதுங்கி நின்றது கொல்கத்தா. ஒரு வழியாக சுனில் நரைன் மீதான தடை நீங்கிய உற்சாகத்தில் உள்ள கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி, யாரும் எதிர்பாரா வகையில் ரூ. 2.4 கோடி கொடுத்து பிரபலமில்லாத கே.சி.கரி யப்பாவை வாங்கியுள்ளது. சுனில் நரைன், கரியப்பா, பிராட் ஹொக், குல்தீப் யாதவ் ஆகியோருடன் மோர்னே மோர்கெல், உமேஷ் யாதவ் பந்துவீச்சில் பலம் சேர்ப்பர். ரொபின் உத்தப்பா, கௌதம் கம்பீர், மணிஷ் பாண்டே ஆகியோர் துடுப்பாட்ட வரிசையைப் பார்த்துக் கொள் வர். மும்பை: 2013-இல் சம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி இந்த முறை முழுக்க, முழுக்க ரிக்கி பொண்டிங் பயிற்சியின் கீழ் களமிறங் குகிறது. உலகக் கோப்பை வென்ற அவுஸ் திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த ஆரோன் /பின்ச், சகலதுறைவீரர் கோரி அண்டர்சன், கீரன் பொல்லார்ட், ரோஹித்சர்மா என துடுப்பாட்ட வரிசை வலுவாகவே உள்ளது. பஞ்சாப்: கடந்த முறை தொடர்ந்து ஐந்து ஆட்டங்களில் வெற்றி பெற்று அசத்திய தோடு இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய பஞ்சாப் அணியில் கிளென் மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், மிச்செல் ஜோன்சன் என நட்சத்திர வீரர்கள் நிறைந்துள்ளனர். இவர் களுடன் இன்னும் தன்னில் ஏராளமான கிரிக் கெட் மிச்சமுள்ளது என சாதிக்கத் துடிக்கும் சேவாக், ரித்திமான் சாஹா ஆகியோர் இந்தத் தொடரை பெரிதும் எதிர்பார்த்துள் ளனர். ஹைதராபாத்: டேவிட் வோர்னரை தலை வராக அறிவித்துள்ள ஹைதராபாத் அணி யில் 'pகர் தவண், மோர்கன், கெவின் பீட் டர்சன் இடம்பெற்றுள்ளனர். இதில் பீட்டர்சன் தொடக்க ஆட்டங்களில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. ஸ்டெயின், டிரென்ட் போல்ட், புவனேஷ்வர் குமார் ஆகியோர் பந்துவீச்சில் கலக்குவர் என எதிர்பார்க் கலாம்.
Reviewed by Author
on
April 08, 2015
Rating:




No comments:
Post a Comment