அண்மைய செய்திகள்

recent
-

28 அமைச்சர்களுடன் இன்று முதல்வராக பதவியேற்கிறார் ஜெயா


ண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டசபைக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெயலலிதா இன்று காலை 11 மணிக்கு, முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார். முதல்வராக ஜெயலலிதாவும் 28 புதிய அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நேற்று சட்டசபைக் கட்சித் தலைவராக ஜெயலலிதா தெரிவு செய்யப்பட்டார். 

இதனையடுத்து முதல்வர் பதவியிலிருந்து விலகினார் ஓ.பன்னீர்ச் செல்வம். இதைத் தொடர்ந்து முதல்வராக பதவியேற்க வருமாறு ஜெயலலிதாவுக்கு ஆளுநர் ரோசய்யா அழைப்பு விடுத்தார். அதன்படி நேற்று பிற்பகல் ஆளுநர் ரோசய்யாவைச் சந்தித்தார். அவரிடம் முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தன்னை சட்டசபை கட்சித் தலைவராக அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுத்தது தொடர்பான தீர்மான நகலையும் ஆளுநரிடம் வழங்கினார். 

அமைச்சரவைப் பட்டியலையும் அவர் ஆளுநரிடம் கொடுத்தார். கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கும் மேலாக ஜெயலலிதாவும் ரோசய்யாவும் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், 28 அமைச்சர்களுடன் ஜெயலலிதா இன்று காலை 11 மணியளவில் பதவியேற்கிறார். மேலும் அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் உட்பட அமைச்சரவையில் இருந்த பழைய முகங்கள் அப்படியே மீண்டும் அமைச்சராகிறார்கள். உடல் நலமில்லாமல் இருக்கும் செந்தூர்பாண்டியன் மற்றும் ஆனந்த் ஆகியோர் மட்டும் நீக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்தான் பதவியேற்பு விழா இன்று நடைபெறவுள்ளது. ஜெயலலிதாவுக்கும், அமைச்சர்களுக்கும் ஆளுநர் ரோசய்யா பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கவுள்ளார். பதவியேற்பு விழாவுக்கு பல்வேறு தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்படுகிறது. மத்திய அமைச்சர்கள், சில மாநில முதல்வர்களும் இதில் கலந்துகொள்ள இருக்கின்றனர் என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
28 அமைச்சர்களுடன் இன்று முதல்வராக பதவியேற்கிறார் ஜெயா Reviewed by NEWMANNAR on May 23, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.