
எட்டாவது ஐ.பி.எல். தொடர் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ஹைதராபாத்தை வீழ்த்தி இரண்டாவது இடத்திற்கு வந்ததையடுத்து, அரையிறுதியில் சென்னை அணியை சந்திக்கிறது.
பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ள இந்நிலையில் முழுப்பலத்துடன் இருக்கும் சென்னையுடன் மோதக் காத்திருக்கிறது மும்பை அணி. இதில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.
நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டி ஹைதராபாத்தில் நடந்தது. இதில் ஹைதராபாத்- –– மும்பை அணிகள் மோதின. இதில் வெற்றி பெறும் அணி 2-ஆவது இடத்தை பிடிக்கும் என்பதால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஹைதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
தொடக்க வீரர்களாக தவான் மற்றும் வோர்னர் களம் இறங்கினார்கள்.
மலிங்க வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் தவான் ஸ்டம்பை பறிகொடுத்தார். அவர் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமி
ழந்து ஏமாற்றம் அளித் தார். அடுத்து ஹென்றிக்யூஸ் களம் இறங்கினார். அடுத்த ஓவரின் முதல் பந்தில் வோர்னர் ஆட்டமிழந்தார். அவர் 6 ஓட்டங்களை எடுத்தார். இதனால் 1.1 ஓவரில் 7 ஓட்டங்களை எடுப்பதற்குள் முக்கிய இரண்டு விக்கெட்டுகளை ஹைதராபாத் அணி இழந்தது.
அதன்பின் வந்த வீரர்களும் சொதப்பியதால் அந்த அணியால் மீண்டு வர இயலவில்லை. கடைசி விக்கெட்டுக்கு வந்த ஸ்டெயின் அதிரடியாக ஆட அந்த அணி 100 ஓட்டங்களைக் கடந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஹைதராபாத் அணி 113 ஓட்டங்களுக்கு சுருண்டது. 114 பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய மும்பை ஒரு விக்கெட்டை மாத்தி
ரம் இழந்து 13.5 ஓவர் களில் வெற்றி இலக்கை அடைந்தது. இதில் சிமன்ஸ் 48இ பட்டேல் 51 ஓட்டங்களைப் பெற்ற னர்.
No comments:
Post a Comment