அண்மைய செய்திகள்

recent
-

வித்தியா மீது மேற்கொள்ளப்பட்ட மிருகத்தனத்திற்கும் மேலான இச் செயற்பாடு கண்டிக்கத்தக்கது.வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.குணசீலன்.



யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை உயர்தர மாணவியான சிவலோகநாதன் வித்தியா மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மிருகத்தனத்திற்கும் மேலான இச் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாகவும்,இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,,,,

தமிழர்களின் கலாச்சாரமும்,பண்பாட்டையும் பேணிப்பாதுகாப்பதற்காக பாடுபட்டுக்கொண்டிருக்கும் எமது தமிழ்ப்பிரதேசத்தில் அரங்கேரியிக்கும் குறித்த சம்பவம் தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த செயலானது மிருகத்தனத்தை விட கேவலமானது.பொதுவாக மிருகங்கள் கூட இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை.மனிதர்கள் ஒரு படி மேலே போய் அதையும் தாண்டி கேவலமான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த செயல் தொடர்பாக வழமை போல் பொலிஸ் விசாரணை ,நீதிமன்ற விசாரணை  என கடந்த காலங்களில் நடைபெற்ற மிக கொடுர செயல்கள் மூடி மறைக்கப்பட்டது போன்று வித்தியாவின் கொலை தொடர்பான இந்த கொடுரச் செயல் மறைக்கப்படாது பொலிஸ் விசாரணை ,நீதிமன்ற விசாரணைகள் நீதியான முறையில் இடம் பெற வேண்டும்.

இவர்களுக்கான தண்டனைகள் உடனடியாக வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாத வகையில் பாதுகாக்க முடியும்.இலங்கை சட்டத்தில் இன்னும் மரண தண்டனை அகற்றப்படாது உள்ளது.

ஆனால் பொதுவாக இலங்கையில் அத்தண்டனை வழங்கப்படுவதில்லை.இவ்வாறான சம்பவங்கள் நடை பெறும் போது அவ்வாறான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற மனநிலை தோன்றுகின்றது.

ஆகவே இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட நீதித்துறை சரியான முறையில் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு ஆகக்கூடிய தண்டனைகளை வழங்குவதன் மூலம் வித்தியாவிற்கு நடந்த கொடுமை எதிர்காலத்தில் எமது பெண் சமூகத்திற்கு இடம் பெறாத வகையில் அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வித்தியா மீது மேற்கொள்ளப்பட்ட மிருகத்தனத்திற்கும் மேலான இச் செயற்பாடு கண்டிக்கத்தக்கது.வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.குணசீலன். Reviewed by NEWMANNAR on May 21, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.