அண்மைய செய்திகள்

recent
-

புங்குடுதீவு மாணவி கொலையை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும் கவனயீர்ப்புப் போராட்டம்


புங்குடுதீவு மாணவி வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டமையை கண்டித்து, வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் கண்டன பேரணிகளும், எதிர்ப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியின் மாணவர்களும், ஆசிரியர்களும் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் போராட்டமொன்றினை இன்று (21) காலை முன்னெடுத்திருந்தனர்.

கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரியிருந்தனர்.

திருகோணமலை மூதூர் அதிபர்கள் சங்கத்தினால் இன்று (21) 04 பாடசாலைகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

கவனயீர்ப்புப் போராட்டம், புங்குடுதீவு மாணவி கொலை
புங்குடுதீவு மாணவி கொலையை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும் கவனயீர்ப்புப் போராட்டம் Reviewed by NEWMANNAR on May 21, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.