மன்னார் மறைமாவட்ட ஆயர் திடீர் சுகவீனமுற்ற நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்கள் திடீர் சுகாவினமுற்ற நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் ஆயர் இல்லத் தகவல்கள் தெரிவித்துள்ளது.
குறித்த செய்தியை மன்னார் மறைமாவட்ட ஆயரின் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களுக்கு கொழும்பு கம்பன் கழகத்தினால் எதிர்வரும் 4 ஆம் திகதி விருது வழங்கப்படவுள்ள நிலையில் ஆயர் அவர்கள் கொழும்பு சென்றிருந்தார்.
இந்த நிலையில் ஆயர் அவர்கள் இலங்கை வந்துள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலாளர்''ஜான் கெர்ரியை'' நேற்று சனிக்கிழமை (02-05-2015) மதியம் சந்திக்கச் சென்று கொண்டிருந்த போதே அவருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மயக்கமுற்ற நிலையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பபட்டு அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மன்னார் ஆயர் அவர்கள் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மன்னார் ஆயர் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை உடனடியாக வழங்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள செய்தியின் அடிப்படையில் மன்னார் ஆயர் அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருடைய உடல் நிலை தேறி வருவதாகவும் மன்னார் ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.
இதே வேளை இலங்கையில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் மக்களின் இடப் பெயர்வுகளின் போதும்,காணாமல் போன மக்களுக்காகவும் மக்கள் மத்தியில் நின்று குரல் கொடுத்து வரும் ஆயர் அவர்களின் நலனுக்காகவும் அவர் குணமடைவதற்காகவும் ஒட்டு மொத்த மக்ககளும் இறைவனை பிரார்த்திக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் திடீர் சுகவீனமுற்ற நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி.
Reviewed by NEWMANNAR
on
May 03, 2015
Rating:
.jpg)
No comments:
Post a Comment