19ஆவது 20ஆவது திருத்தச் சட்டம் என்றால் என்ன என்பதை அமைச்சர் சம்பிக்க தெரிந்திருக்க வேண்டும்- வன்னி எம்.பி. ஹீனைஸ் பாறூக்.-Photos
இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டம் இன்னும் முற்றுப்பெறவில்லை. தேர்தல் மாற்றத்தக்குப் பின்பே அது முற்றுப் பெறும் என மின்சக்தி எரிபொருள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்திருப்பது 19ஆவதும் 20ஆவதும் திருத்தச் சட்டம் என்ன வென்று அவருக்கு தெரியாது போலும் இருப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னித் தொகுதி அமைப்பாளருமான சட்டத்தரணி ஹீனைஸ் பாறூக் தெரிவித்துள்ளார்.
இளைஞர் விளையாட்டு புத்துணர்வு சரித்திரத்தின் முதல் தடவையாக விளையாட்டு ஆற்றல் உடைய இளைஞர்களுக்கு வலுவான ஆரம்பத்தை மையமாகக் கொண்டு ஓரே நாளில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் சகல இளைஞர் கழகங்களையும் உள்ளடக்கும் விதத்தில் நடாத்திய நிகழ்வு நேற்று சனிக்கிழமை (02) மன்னார் முசலி சிலாபத்துறை பாடசாலையில் இடம் பெற்றது.
இதன் போது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றகையில்,,,
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க பத்திரிகைகளுக்கு ஓர் அறிக்கை விடுத்திருந்தார். அதாவது 19வது திருத்தச் சட்டம் இன்னும் முடிவடையவில்லை என்று.
நாங்கள் இந்த நாட்டில் தேர்தல் காலங்களில் ஐனாதிபதிக்கு இருந்து வரும் நிறைவேற்று அதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் இவ் அதிகாரத்தை பாராளுமன்றத்துக்கும் அமைச்சரவைக்கும் இவற்றை பகிர்ந்து அளிப்போம் என்ற உறுதிப்பாட்டை வழங்கியிருந்தோம். அதற்கமைய இந்த 19வது திருத்தச் சட்டம் வெற்றி அடைந்தபோது அது பூரணப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க சொன்ன விடயம் என்னவென்றால் தேர்தல் மாற்றத்தைக் கொண்டு வரும் பொழுது தான் 19வது திருத்தச் சட்டம் முடிவுறும் என்றார்.
ஆனால் தேர்தல் மாற்றம் என்பது 20வது திருத்தச் சட்டமாகவும் ஐனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை பகிர்தலாக 19வது திருத்தச் சட்டமாகவும் உள்ளது.
ஆனால் தேர்தல் மாற்றத்தை உடனடியாக கொண்டு வரும் பொழுது அது சிறுபான்மை மக்களாக வாழ்கின்ற தமிழ் முஸ்லீம் மக்களுக்கு அது ஒரு சவாலாகவும் இருக்கின்றது.
ஆகவே இதை அவசரப்பட்டு கொண்டுவர முனைபவர்கள் ஓர் இனவாதியாக இருக்க வேண்டும் அல்லது அவர்கள் பெரும்பான்மை இனக் கட்சியை பலப்படுத்தும் எண்ணம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
ஆகவே சிறுபான்மை இன பாராளுமன்ற அங்கத்துவத்தை தக்கவைக்க நாங்கள் பரீசிலீக்க வேண்டியுள்ளது. அதாவது பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டத்தில் உள்ளுராட்சி மட்டத்தில், மாகாண சபை மட்டத்தில் , மாவட்ட மட்டத்தில், கிராமிய மட்டத்தில் இதை பரீசிலீக்க வேண்டியுள்ளது.
இவ்வாறன செயல்பாட்டுக்குப் பின்பு தான் தேர்தல் மாற்றத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது.
ஆகவே அவசரப்பட்டு தேர்தல் மாற்றத்துக்கு நாம் வருவோமானால் கடந்த காலங்களில் தமிழ் பேசும் மக்களுக்கு எவ்வாறு உரிமைகள் மறுக்கப்பட்டதோ இதைவிட மோசமான செயல் பாராளுமன்றத்தில் சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுக்கும் பிரதி நித்துவம் இல்லாத நிலை உருவாகும் என்பதை நினைவூட்டுகின்றேன்.என்றார்.
குறித்த நிகழ்வின் போது அணிகளுக்கிடையே இடம்பெற்ற மென்பந்து கிரிக்கட் விளையாட்டுப்போட்டியின் இறுதிப் போட்டியில் பெண்கள் அணியில் கீரிசுட்டான் விண்மீன் கழகம் காத்தான்குளம் இளைஞர் கழகத்துடன் மோதி வெற்றி கின்னத்தை சுவீகரித்துக் கொண்டது.இதே வேளை ஆண்கள் அணியில் இறுதிப் போட்டியில் சிலாபத்துறை வெள்ளிமலையும் மனற்குளம் இளைஞர் கழங்களும் மோதியதில் மணற்குளம் ஆறு ரன்களால் வெற்றிக் கொண்டு வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
19ஆவது 20ஆவது திருத்தச் சட்டம் என்றால் என்ன என்பதை அமைச்சர் சம்பிக்க தெரிந்திருக்க வேண்டும்- வன்னி எம்.பி. ஹீனைஸ் பாறூக்.-Photos
Reviewed by NEWMANNAR
on
May 03, 2015
Rating:
No comments:
Post a Comment