மேற்கிந்திய தீவு அணிக்கு வெற்றி தொடர் சமநிலையில் முடிவு
இங்கிலாந்து அணிக்கெதிரான 3வது டெஸ்ட் போட்டி யில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றுள்ளதுடன் தொடரை யும் சமன் செய்தது.
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் சென்ற இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
மூன்றாவதாக நடைப்பெற்ற இவ் டெஸ்ட் போட்டி பார்படாசில் நடைபெற்றது.
இதில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத் தாடிய இங்கிலாந்து அணி 257 ஓட்டங்கள் குவித்தது. இதில் அணித்தலைவர் குக் 105 ஓட்டங்களும், மொயின் அலி 58 ஓட்டங்களும் அதிகபட்ச ஓட்டங்களாக பெற்றுக்கொண்டனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் 189 ஓட்டங்களிலேயே சுருண்டது. அணியின் அதிகபட்ச ஓட்டமாக பிளாக்வுட் 85 ஓட்டத்தினை பெற்றுக்கொணடார்
பந்துவீச்சினை பொருத்த வரை இங்கிலாந்து அணி யின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் 6 விக் கெட்டினை வீழ்த்தினார்.
இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 68 ஓட்டங்கள் முன்னிலையில் இருக்க 2வது இன்னிங்ஸை தொடங்கியது.
இங்கிலாந்து அணி, 123 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழக்க. இதனால் மேற்கிந் திய தீவு அணிக்கு வெற்றி இலக்காக 192 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.
192 ஓட்ட இலக்கினை நோக்கி 2வது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும் அபார மாக ஆடிய டேரன் பிராவோவின் ஓத்துழைப்புடன் மேற்கிந்திய தீவு வெற்றி பெற்றது.
மேற்கிந்திய தீவு அணியின் துடுப்பாட்டத்தை பொருத்த வரையில், பிராத்வைட் 25 ஓட்டங்களுட னும், ஹோப் 9 ஓட்டங்களுடனும், சாமுவேல்ஸ்
20 ஓட்டங்களுடனும், சந்தர்பால் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஆடுகளத்தை விட்டு வெளியேரினர்.
அபாரமாக ஆடிய டேரன் பிராவோ 82 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க. இறுதி வரை பிளாக்வுட் 47 ஓட்டங்களுடனும், அணித் தலைவர் ராம்தின் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் அணியின் வெற்றியுடன் ஆடு களத்தில் இருந்தனர்.
இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் இழப்புக்கு 194 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முதலிரண்டு டெஸ்டின் முடிவில், 1-0 என இங்கி லாந்து அணி முன்னிலை வகித்தது. ஆனால் தற்போது நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவின் இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இவ் டெஸ்ட் தொட ரின் போட்டியின் 'தொடர் நாயகன்' விருதினை இங் கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்; ஆண்டர் சனும், 'போட்டி நாயகன்' விருதினை மேற்கிந்திய அணியின் துடுப்பாட்ட வீரரான பிளாக்வுட்டும் பெற்றனர்.
மேற்கிந்திய தீவு அணிக்கு வெற்றி தொடர் சமநிலையில் முடிவு
Reviewed by Author
on
May 05, 2015
Rating:

No comments:
Post a Comment