அண்மைய செய்திகள்

recent
-

இணக்கமின்றி முடிவடைந்த மைத்திரி–மஹிந்த சந்திப்பு


ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கும் இடை­யி­ல் நேற்று நடைபெற்ற விஷேட சந்­திப்பு இணக்­கப்­பா­டின்றி முடி­வுக்கு வந்­தது. இந் நிலையில் இரு­வரும் மீண்டும் பிறி­தொரு நாளில் சந்­தித்து பேச தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பிர­தமர் வேட்­பா­ள­ராக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை கள­மி­றக்க வேண் டும் என்ற பிர­தான கோரிக்கை உள்­ளிட்ட ஐந்து விட­யங்­களை முன்­வைத்து இந்த சந்­திப்­பா­னது நேற்று பாரா­ளு­மன்­றத்தில் உள்ள ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. பிற்­பகல் 1.30 மணிக்கு ஒழுங்குசெய்­யப்­பட்­டி­ருந்த இந்த சந்­திப்­புக்­காக ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன பிற்­பகல் 12.45 மணிக்கு பாரா­ளு­மன்ற வளா­கத்­துக்கு வருகை தந்தார். 

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ பிற்­பகல் 1.45 மணிக்கு பாரா­ளு­மன்­றத்­துக்கு வருகை தந்தார். இந்நிலையில் சுமார் ஒரு மணி நேரம் இரு­வ­ருக்கும் இடை­யி­லான கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­ற­துடன் ஜனா­தி­பதி மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி சார்பில் பாரா­ளுமன்ற உறுப்­பி­னர்­களைக் கொண்ட விஷேட குழு­வி­னரும் சந்திப்பில் கலந்­து­கொண்­டனர். ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன சார்பில் அமைச்­சர்­க­ளான ராஜித சேனா­ர­த்ன, எம்.கே.டீ.எஸ்.குண­வர்­தன, துமிந்த திஸா­நா­யக்க எதிர்க்­கட்சித் தலைவர் நிமல் சிறி­பால டி சில்வா, சுதந்­திர கட்­சியின் பொதுச் செய­லாளர் அனுர பிரி­ய­தர்­ஷன யாப்பா மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைஸர் முஸ்­தபா ஆகியோர் கலந்­து­கொண்­டனர். 

 முன்னாள் ஜனா­தி­ப­தி­யுடன் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான குமார வெல்­கம, ஜீ.எல்.பீரிஸ், பந்­துல குண­வர்­தன, டலஸ் அல­கப்­பெ­ரும மற்றும் மஹிந்­தா­னந்த அலுத்­க­மகே ஆகியோர் கலந்­து­கொ­ண­டனர். எதிர்­வரும் பாரா­ளு­மன்ற தேர்­தலின் போது பிர­தமர் வேட்­பா­ள­ராக முன்னாள் ஜன­தி­பதி மஹிந்­தவை ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியின் பிர­தமர் வேட்­பா­ள­ராக கள­மி­றக்­குதல், எதிர்­வரும் 15 ஆம் திகதி கலைக்­க­பட தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் கால எல்­லையை நீடித்தல், ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பை பலப்­ப­டுத்தல், கட்­சியில் போட்­டி­யி­டு­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிக்கும் வேட்பு மனு குழுவில் மஹிந்த அணி­யி­ன­ரையும் இணைத்தல், புதி­தாக வெளி­யி­டப்­பட்ட நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு தொடர்­பி­லான வர்த்­த­மானி அறி­வித்­தலை ரத்து செய்தல் ஆகிய ஐந்து விட­யங்கள் தொடர்பிலேயே இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 

 இந் நிலையில் ஒரு மணி நேர கலந்­து­ரை­யா­டலின் பின்னர் ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன பாரா­ளு­மன்ற வளா­கத்தில் இருந்து வெளி­யே­றி­ய­துடன் அதனைத் தொடர்ந்து 10 நிமி­டங்­களில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவும் அங்­கி­ருந்து வெளி­யே­றினார். ஜனா­தி­பதி வெளி­யேறும் போது பாரா­ளு­மன்ற நுழை­வா­யிலில் காத்­தி­ருந்த ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் எதுவும் குறிப்­பி­டா­த­துடன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ,' ஜெய­வேவா.., நான் போய் வரு­கின்றேன்' என ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு கைய­சைத்து தெரி­வித்து விட்டு சென்றார். ஜனா­தி­ப­தியும் முன்னாள் ஜனா­தி­ப­தியும் சென்­றதன் பின்னர் அவர்­க­ளது குழு­வினர் பாரா­ளு­மன்­றத்தில் கலந்­து­ரை­யா­டலில் ஈடு­பட்­டுள்­ளனர். இதனைத் தொடர்ந்து மாலை நான்கு மணி­ய­ளவில் அவர்கள் பாரா­ளு­மன்றில் இருந்து வெளி­யேற ஆரம்­பித்­தனர்.



 இந் நிலையில் சந்­திப்பு குறித்து ஜனா­தி­பதி மைதி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான குழு­வி­ன­ருடன் கலந்­து­கொண்ட நீர்­பா­சன அமைச்சர் துமிந்த திஸா­நா­யக்க ஊட­கங்­க­ளிடம் குறிப்பிடுகையில், ஸ்ரீ லங்க சுதந்­திர கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைதி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் கட்­சியின் ஆலோ­சகர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கும் இடையில் கட்­சியின் எதிர்­காலம் குறித்த விஷேட சந்­திப்பு இடம்­பெற்­றது. இந்த சந்­திப்­பா­னது நூற்றுக்கு நூறு வீதம் வெற்­றி­க­ர­மாக முடி­வுற்­றது. இரு தரப்­பி­னரும் மீண்டும் இணக்கம் கண்­டுள்ளோம். இந்த சந்­திப்பின் போது பல விட­யங்கள் குரித்து நாம் கலந்­து­ரை­யா­டினோம். விஷே­ட­மாக எதிர்­வரும் தேர்­தலை எதிர்­கொள்­வது குறித்து இதன் போது ஆரா­யப்­பட்­டது. 

சந்­திப்பின் போது கட்சி குறித்த விட­யங்­களே ஆர­ாயப்­பட்­டன. அர­சாங்கம் குறித்த எந்­த­வி­த­மான விட­யங்­களும் பேசப்­ப­ட­வில்லை. இந்த சந்­திப்பு குறித்து கட்­சியின் செய­லாளர் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஊட­கங்­க­ளுக்கு அறி­விப்பார்' என்றார். இத­னை­ய­டுத்து பாரா­ளு­மன்றில் இருந்து வெளி­யே­றிய முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன் சந்­திப்பில் கலந்­து­கொண்ட முன்னாள் அமைச்சர் குமார வெல்­கம ஊட­கங்­க­ளிடம் குறிப்பிடுகையில், 'ஜனா­தி­பதி மைதி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் - முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கும் இடை­யி­லான இந்த சந்­திப்பு குறித்து நாம் முழு­மை­யாக திருப்தி கொள்ள முடி­யாது. எனினும் இரு தரப்பும் தொடர்ந்தும் பேசு­வ­தற்கு முடிவு செய்­துள்ளோம். ஜனா­தி­பதி மைத்தி­ரி­பா­ல­வையும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வையும் ஒரே மேடைக்கு கொண்­டு­வ­ரு­வதே எமது முயற்­சி­யாகும். 

அது தொடர்­பி­லேயே இந்த பேச்­சுக்­களை நாம் நடத்­து­கின்றோம். இந்த பேச்­சு­வார்த்­தை­களின் போது நாம் விஷே­ட­மாக எதிர்­வரும் பார­ளு­மன்ற தேர்­தலில் மஹிந்த ரஜ­ப­க்ஷவை பிர­தமர் வேட்­பா­ள­ராக முன்நிறுத்துமாறு யோசனை முன்­வைத்தோம். எனினும் அது தொடர்பில் ஜனா­தி­பதி மைதி­ரி­பால சிறி­சேன திருப்­தி­க­ர­மான பதில் எத­னையும் தர­வில்லை. அந்த யோச­னைக்கு அவர் தொடர்ந்தும் மெளனம் காக்­கின்றார். அதே போன்று உள்­ளூ­ராட்சி சபை­களின் கால எல்­லையை நீடிப்­பது குறித்த யோச­னைக்கும் திருப்­தி­க­ர­மான பதில் இல்லை. ஏனைய கோரிக்­கை­களும் அவ்வாறே அமைந்தன. எனினும் நாம் முன்­வைத்த நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு தொடர்­பி­லான யோச­னையும் கோரிக்­கையும் ஜன­தி­ப­தி­யினால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. 

அதன்­படி நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவை செயற்­ப­டுத்தும் அல்­லது தலை­யீடு செய்யும் அர­சியல் தலை­யீ­டு­களை நீக்க ஜனா­தி­பதி எம்­மிடம் உறு­தி­ய­ளித்தார். எனினும் பிர­தமர் வேட்­பளர் கோரிக்­கையே எமது பிர­தான கோரிக்கை. விரைவில் அதற்­கான சாத­க­மான பதிலை நாம் எதிர்ப்­பார்க்­கின்றோம். அது குறித்த நம்­பிக்கை எமக்கு உள்­ளது. அதனால் தொடர்ந்து பேச்­சு­வார்த்தை நடத்­துவோம். என்றார். இந் நிலையில் மஹிந்த ரஜ­ப­க்ஷ­வுடன் இனைந்து கலந்­து­ரை­யா­டலில் ஈடு­பட்ட முன்னாள் அமைச்­சர்­க­ளான பந்­துல குண­வர்­தனஇ டலஸ் அலகப் பெருமஇ ஜீ.எல்.பீரிஸ் மற்றும் மஹிந்­தா­னந்த அலுத்­க­மகே ஆகியோர் இனைந்து ஊட­கங்கள் முன்­னி­லையில் பேசினர். அவர்கள் சர்பில் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யிட்ட முன்னாள் அமைச்சர் டலஸ் அலகப் பெரும குறிப்பிடுகையில், 'எமது பிரதான கோரிக்கையான பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனதிபதி மஹிந்தவை களமிறக்குவது குறித்து ஜனாதிபதி சம்மதம் தெரிவிக்காவிடினும் அதனை கட்சியின் மத்திய செயற்குழு ஊடாக தீர்மானிக்கும் நிலைப்பாடில் அவர் உள்ளார். 

ஏனைய விடயங்கள் தொடர்பிலும் உறுதியான இனக்கப்பாடுகள் எட்டப்படவில்லை. எனினும் எமது கோரிக்கைகளுக்கு அமைவாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடர்பில் அவதானம் செலுத்தி அதில் தலையீடு செய்யும் அரசியல் சக்தியை நீக்குவதற்கு ஜனாதிபதி சம்மதம் தெரிவித்தார். இந் நிலையில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் குழுவினரும் எமது குழுவினரும் ஒவ்வொரு வாரமும் சந்தித்து கலந்துரையாட நாம் தீர்மானித்துள்ளோம். என்றார். இதேவேளை சந்திப்பு தொடர்பில் சுதந்திரக் கட்சியின் செயலாளர் அனுர பிரியதர்ச யாப்பா அறிக்கையொன்றை விடுத்திருந்தார். 

 அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பிர­தமர் வேட்­பாளர் உட்­பட 5 முக்­கிய விட­யங்கள் தொடர்­பாக நேற்று புதன்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும்இ முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்­ச­வுக்கும் இடையே இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் எதிர்­கால நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக கட்­சியின் தலைவர் என்ற ரீதியில் ஜனா­தி­ப­திக்கும் கட்­சியின் ஆலோ­சகர் என்ற ரீதியில் முன்னாள் ஜனா­தி­ப­திக்கும் இடையே பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­றது. இதன்­போது முக்­கிய 5 விட­யங்கள் தொடர்­பாக அதிக கவனம் செலுத்­தப்­பட்­டது. எதிர்­வரும் பொதுத்­தேர்­தலின் பிர­தமர் வேட்­பாளர். உள்­ளூ­ராட்சி சபை­களை கலைத்தல். பொதுத்­தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் போட்­டி­யி­டு­வது. 

போன்ற காரணங்களே ஆராயப்பட்டன. அத்­தோடு வேட்­பா­ளர்கள் பட்­டியல் தொடர்­பா­கவும் ஆரா­ய­பட்­டது. மேலும் விசேட குற்­ற­வியல் விசா­ரணை பிரிவு அர­சியல் மய­மாக்­கப்­பட்­டுள்­ளது தொடர்­பாக சில பாரா­ளு­ம­னற உறுப்­பி­னர்கள் முன்­வைக்கும் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும் ஜனா­தி­பதி அதிக அக்­கறை காட்­டினார். அத்­தோடு பேச்­சு­வார்த்­தை­களின் அனைத்து விப­ரங்­க­ளையும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் செயற்­கு­ழுவில் முன்­வைப்­ப­தற்கும். அவை தொடர்­பாக விவா­திப்­ப­தற்கும் முடிவு செய்­யப்­பட்­டது. இதே­வேளை சுதந்­திர கட்­சியின் மத்­திய செயற்­குழு எடுக்கும் தீர்­மா­னங்­க­ளுக்கு அனை­வரும் கட்­டுப்­பட்டு கட்சி ஒழுக்­கத்தை பாது­காக்க வேண்­டு­மென்றும் இதன்­போது ஜனா­தி­பதி வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

இணக்கமின்றி முடிவடைந்த மைத்திரி–மஹிந்த சந்திப்பு Reviewed by Author on May 07, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.