அமெரிக்காவில் இறைதூதர் கேலிச்சித்திர கண்காட்சியை தாக்கியவர்கள் சுட்டு கொலை
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் முஹமது நபியை சித்தரிக்கும் கேலிச்சித்திரங்களைக் கொண்ட கண்காட்சி மண்டபத்திற்கு வெளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய இரு துப்பாக்கிதாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
டலாஸ் புறநகர் பகுதியில் ஞாயிறு இரவு 7 மணி அளவிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சர்ச்சைக்குரிய கண்காட்சி நடக் கும் மண்டபத்திற்கு முன்னால் காரில் வந்த இரு வர், முஹமது கலை கண்காட்சியை உடன் நிறுத் துமாறு கூச்சலிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அந்த இருவரும் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ஆரம்பித்துள்ளனர். நகர பொலிஸ் அதிகாரிகளுக்கும் இரு துப்பாக்கி தாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் அந்த இருவரும் கொல் லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் பாதுகாவலர் ஒருவரின் கணுக்காலில் துப் பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. எனினும் அவர் ஆபத் தான நிலையில் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்றபோது கண்காட்சி மண்டபத்திற்குள் இருந்த சுமார் 200 பேர் அவசர மாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். நெதர்லாந் தைச் சேர்ந்த இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல்வாதி கியர்ட் வில்டர்ஸ{ம் அந்த கண்காட்சியில் பங்கேற் றிருந்தார்.
எனினும் சர்ச்சைக்குரிய கண்காட்சியில் இவ்வாறான அசம்பாவிதம் எதிர்பார்க்கப்பட்டது என்றும் அதனால் முன்கூட்டியே அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட் டிருந்ததாகவும் கார்லன்ட் பகுதி பொலிஸ் பேச் சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட மூன்றாவது சந்தேக நபர் ஒருவர் அருகில் இருக்கும் கடைத் தொகுதி ஒன்றில் காணக்கிடைத்ததாக செய்தி வெளியானதை அடுத்து குறித்த பகுதி மூடப்பட்டு தீவிர சோதனைகள் இடம்பெற்றுள்ளன.
நிய+யோர்க்கை மையமாகக் கொண்டு இயங்கும் அமெரிக்கர்களின் சுதந்திர பாதுகாப்பு முயற்சி என்ற அமைப்பே இந்த கண்காட்சியை ஏற்பாடு செய் திருந்தது. கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத் தும் போட்டியாக இது நடத்தப்படுவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதில் நாடெங்கும் இருந்து சுமார் 350 கேலிச் சித்திரங்கள் காட்சிப் படுத்தப்பட்டிருப்பதோடு வெற்றி பெறுபவருக்கு 10,000 டொலர் பரிசும் அறிவிக் கப்பட்டிருந்தது. இதற்கான வெற்றியாளரும் ஞாயிற் றுக்கிழமை தேர்வுசெய்யப்படவிருந்தது.
அமெரிக்கர்களின் சுதந்திர பாதுகாப்பு முயற்சி என்ற அமைப்பை நடத்தும் பமிலா கெல்லர் என்ற இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துகளை பரப்பும் பெண், ஏற்கனவே நிய+யோர்க்கில் இஸ்லாமிய எதிர்ப்பு விளம்பரங்களை காட்சிப்படுத்த அனுமதி கோரி பலமுறை நீதிமன்றம் சென்றவராவார். அதேபோன்று நிய+யோர்க் உலக வர்த்தக மைய பகுதிக்கு அருகில் இஸ்லாமிய மையம் ஒன்றை கட்டுவதற்கு எதிராக இந்த அமைப்பு தீவிர பிரசாரம் நடத்தி இருந்தது.
துப்பாக்கிச் சூட்டுக்கும் பின்னர் தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்ட கெல்லர், "இது கருத்துச் சுதந் திரத்திற்கு எதிரான ஒரு யுத்தம்" என்று குறிப்பிட் டுள்ளார். எனினும் அவரை விமர்சிப்பவர்கள், இந்த பெண் இவ்வாறான சம்பவத்தை ஏற்படுத்த பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளனர். இறைத்தூதரை சித்தரிக்கும் சித்திரங் கள் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் இறைதூதர் கேலிச்சித்திர கண்காட்சியை தாக்கியவர்கள் சுட்டு கொலை
Reviewed by Author
on
May 05, 2015
Rating:

No comments:
Post a Comment