அண்மைய செய்திகள்

recent
-

தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி அழகர் நேற்;று வைகை ஆற்றில் இறங்கல்


தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி அழகர் நேற்;று காலை வைகை ஆற்றில் இறங்கினார். இலட்சக் கணக்கான பக்தர்கள் குவிந்து அழ கரை தரிசனம் செய்தனர். கோவில் மாநகர் என்ற பெருமைக் குரிய மதுரை மாநகரில் மாதம்தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாக்களில் சித்திரைத் திருவிழா வர லாற்றுச் சிறப்பு பெற்றதாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை யும் மதுரை அருகே உள்ள அழகர் கோவிலையும் இணைத்து இந்த விழா நடக்கிறது. சைவமும் வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. மீனாட்சி அம்மன் மற்றும் அழகர்கோவி லில் நடைபெறும் இந்த விழா மதுரை யில் சுமார் 20 நாட்கள் கோலாகலமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரு கிறது. இதில் முதலில் வருவது மீனா ட்சி அம்மனின் சித்திரை திருவிழா. இந்த விழா நிறைவு பெற்றதும் அழகர்கோவில் விழா தொடங்கியது. வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக அழகர்மலையில் இருந்து சுந்தரராஜப்பெருமாள் கள்ளழகர் வேடம் பு+ண்டு தங்கப்பல்லக்கில் மது ரைக்கு புறப்பட்டார். கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் வழியாக நேற்று முன்தினம் காலை 6 மணி அளவில் மதுரையை அடுத்த மூன்றுமாவ டிக்கு வந்தார் நேற்று முன்தினம இரவு 10 மணியளவில் தல்லா குளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந் தார். அங்கே பெருமாள் திருமஞ்சனமாகி தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 12 மணி அளவில் ஸ்ரீPவில்லிபுத்தூர் ஆண்டாள் சு+டிக் கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதன்பின் கருப்பண்ணசாமி கோவிலுக்கு வந்த கள்ளழகர் ஆயிரம்பொன் சப்பரத்தில் எழுந்தருளினார்.
தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி அழகர் நேற்;று வைகை ஆற்றில் இறங்கல் Reviewed by Author on May 05, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.