பொலார்ட், ராயுடு அதிரடி : மும்பை இந்தியன்ஸ் வெற்றி
எட்டாவது ஐ.பி.எல். தொடரில் நேற்று விறுவிறுப்பாக நடந்த போட்டியில் பொலார்ட் மற்றும் ராயுடுவின் அதிரடி ஆட்டத்தால் மும்பை அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது. டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கிடையில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லிஇ நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் யுவராஜ் சிங் 57 ஓட்டங்களை விளாசினார். 153 என்ற வெற்றி இலக்கைநோக்கி களமிறங்கிய மும்பை அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது. போட்டியின் நடுவே மழை குறுக்கீடு காரணமாக சற்று தாமதாகத்தான் போட்டி நடந்தது. இதில் பொலார்ட் மற்றும் ராயுடு ஆகிய இருவரும் நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதில் ராயுடு 49 ஓட்டங் களையும், பொலார்ட் 26 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பொலார்ட், ராயுடு அதிரடி : மும்பை இந்தியன்ஸ் வெற்றி
Reviewed by Author
on
May 06, 2015
Rating:
Reviewed by Author
on
May 06, 2015
Rating:


No comments:
Post a Comment