எனது நடிப்பு தமிழர்களுக்கு பிடிக்கும்–பிராவோ
நான் நடித்துள்ள 'உலா' தமிழ் படத்தை தமிழ் மக்கள் நிச்சயம் ரசிப்பார்கள்' என்று மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னணி வீரரும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வீரருமான பிராவோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிராவோ மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டு மல்ல. சிறந்த பாடகர், இசையமைப்பாளர், நடன கலைஞர் என பன்முக திறமை கொண்டவர் பிராவோ, சிறப்புத் தோற்றத்தில் நடித்த 'உலா' என்ற தமிழ்படம் விரைவில் வெளியாக உள்ளது. சென்னையில் பிராவோ இசையமைத்து வெளியிட்ட 'சலோ சலோ' இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சென்னை அணியின் தலைவர் உள்ளிட்ட பல வீரர்கள் பங்கேற்றனர். இதில் பிராவோ பேசுகையில், '' உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம் கிடைக்காதது மிகுந்த வருத்தத்தை அளித்தது. ஆனால் அந்த 2 மாத காலத்தையும் எனது இசைப்பயணத்திற்கு பயன்படுத்தி கொண்டேன். தமிழ் சினிமாவை பொறுத்தவரை 'உலா' என்ற படத்தில் நடித்துள்ளேன். 'உலா' வெளி வந்த பிறகு எனக்கு மேலும் பல தமிழ் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று கருதுகிறேன். எனது நடிப்பும் தமிழ் மக்களுக்கு பிடிக்கும் என்று கருதுகிறேன். விரைவில் சென்னையில் ஒரு நடனப்பள்ளியை தொடங்கவுள்ளேன்'' என்றார்.
எனது நடிப்பு தமிழர்களுக்கு பிடிக்கும்–பிராவோ
Reviewed by Author
on
May 06, 2015
Rating:
Reviewed by Author
on
May 06, 2015
Rating:


No comments:
Post a Comment