அண்மைய செய்திகள்

recent
-

மடுவில் 'சதொச' விற்பiனை நிலையம் திறந்து வைப்பு.(Photos)

மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேச செயலகப் பிரிவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 'சதொச' விற்பனை நிலையத்தை கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதின் நேற்று செவ்வாய்க்கிழமை(5) திறந்து வைத்தார்.

பிரசித்தி பெற்ற மடு மாதா ஆலயத்திற்கு வருகை தரும் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்களினது நலன் கருதியும்,பிரதேச மக்களின் நன்மை கருதியும் அமைச்சர் இந்த விற்பனை நிலையத்தை; திறந்து வைத்தார்.

புதிய அரசாங்கத்தின் கீழ் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்ட நிறுவனங்களில் 'சதொச' நிறுவனமும் ஒன்றாகும.

100 நாள் வேலைத்திட்டத்திற்கமைவாக இந்த 'சதொச' நிறுவனங்கள் அமைச்சர் றிசாத் பதியுதீனன் பணிப்பரைக்கமைய பதுளை 'ஹாலிஎல' உள்ளிட்ட பல பிரதேசங்களில் திறந்து வைக்கப்பட்டன.

இதன் போது நேற்று செவ்வாய்க்கிழமை (5) மடு பிரதேசத்துக்கு விஜயம் செய்த அமைச்சர்  குறித்த சதொச விற்பனை நிலையத்தை வைபவ ரீதியாக  திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
 



மடுவில் 'சதொச' விற்பiனை நிலையம் திறந்து வைப்பு.(Photos) Reviewed by Admin on May 06, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.