NORTHERN CHAMPIONS LEAGUE T20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பம் -Photos
மன்னார் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் அனுமதியுடன் பெரியகடை ஸ்டார் ஈகிள் விளையாட்டு கழகம் தனது 10வது வருடத்தினை முன்னிட்டு நடாத்துகின்ற NORTHERN CHAMPIONS LEAGUE T20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 2015-05-09ம் திகதி சனிக்கிழமை மன்னார் பொதுவிளையாட்டு மைதானத்தில் வெகு கோலாகலமாக ஆரம்பமானது. ஆரம்பம்
இதில் பிரதம அதிதிகளாக வன்னி பாராளுமன்னற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வினோ, வடக்கு மாகாண அமைச்சர் டெனீஸ்வரன், வட மாகாணசபை உறுப்பினர் குணசீலன், மன்னார் பிரதேச H.Q.I அஜந்த றொட்ரிகோ, மன்னார் வலய உதவி கல்விபணிப்பாளர் ஞானராஜ், சிங்கர் பிளஸ் முகாமையாளர் யோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
இந்த சுற்றுப்போட்டியானது வடமாகாணத்திலுள்ள 05 மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்ட அணிகளைகொண்டு வடமாகாண கிரிக்கெட் வரலாற்றில் நடாத்தப்படுகின்ற முதலாவது சுற்றுப்போட்டியாகும். இந்த சுற்றுப்போட்டியில் மன்னார் றோயல்ஸ், யாழ்ப்பாணம் லயன்ஸ், முல்லை கிங்ஸ், கிளி பேட்ஸ், மன்னார் ரைடர்ஸ் ஆகிய 06 அணிகள் ஒன்றை ஒன்று மோதுகின்றது.
அதே தினத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு முதலாவது லீக் போட்டி நடைபெற்றது. இதில் மன்னார் றோயல்ஸ் அணியை எதிர்த்து யாழ்ப்பாணம் லயன்ஸ் மோதியது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மன்னார் றோயல்ஸ் அணியினர் களத்தடுப்பினை தெரிவுசெய்தனர். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பணம் லயன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 07 விக்கெட்டுக்களை இழந்து 220 ஓட்டங்களைபெற்றனர். துடுப்பாட்டத்தில் சுஜந்தன் 41(17) ஓட்டங்களையும் சரன்ராஜ் 41(26) ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டங்களாக பெற்றனர். பந்துவீச்சில் தனரரி 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மன்னார் றோயல்ஸ் அணியினர் ஆரம்பத்தில் வேகமாக ஓட்டங்களை குவித்தாலும் பின்னர் விக்கெட்டுக்களை அடுத்தடுத்து இழந்தனர். அதனால் 15 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 170 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். துடுப்பாட்டத்தில் கமில்டன் றோய் 89(34), அன்ரன் 26(19) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அஜித் 06 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
முதலாவது லீக் போட்டியில் யாழ்ப்பாணம் லயன்ஸ் அணி 50 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. ஆட்ட நாயகனாக யாழ்ப்பாணம் லயன்ஸ் அணியின் அஜித் தெரிவுசெய்யப்பட்டார்.
NORTHERN CHAMPIONS LEAGUE T20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பம் -Photos
Reviewed by NEWMANNAR
on
May 15, 2015
Rating:
No comments:
Post a Comment