மன்னார் குஞ்சுக்குளம் கிராமத்திற்கான பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளது!-Photos
குஞ்சுக்குளம் கிராமத்திற்கான பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளதால் அப்பகுதி மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
கடந்த ஒரு வாரகாலமாக மல்வத் ஓயாவின் ஆற்று நீர் பெருக்கெடுத்துள்ளதால் குஞ்சுக்குளம் கிராமத்திற்கான பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளது. அதனால் கடந்த சில நாட்களாக குறித்த கிராம மக்களின் தரைவழி போக்குவரத்து தடைபட்டுள்ளது.
மல்வத்து ஓயாவின் ஆற்று நீர் குஞ்சுக்குளம் பிரதான வீதியை ஊடறுத்து பாய்வதினால் இவ் அனர்த்தம் இடம் பெற்றுள்ளது.
இதனை அடுத்து குறித்த கிராம மக்கள் குஞ்சுக்குளம் தொங்கு பாலத்தை போக்குவரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
எனினும் குறித்த தொங்குபாலம் ஏற்கனவே சேதமடைந்துள்ளதால் அப்பாலத்தினூடாக செல்வது அபாயகரமாக காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே இக் கிராமத்தின் பிரதான வீதி நீரில் மூழ்காதவாறு பாலம் அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டும் அவ் நிர்மான பணிகள் மந்தகதியில் நடைபெற்றுவந்ததினால் பால வேலைகள் முற்றுப்பெறாத நிலையில் அங்கு நிர்மானிக்கப்பட்ட பாலத்திற்கான தூண்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது. இதனால் பாலவேலைகள் மேலும் தடைப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இக் கிராம மக்களுக்கான உணவு பொருட்கள் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு கையிருப்பில் உள்ளது மேலும் ஒரு வாரம் குறித்த மல்வத் ஓயா நீர் தொடர்ந்து பாயுமானால் மாற்று வழியூடாக உணவு பொருட்களை அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகளை மடு பிரதேச செயலகம் மேற்கொண்டு வருகிறது.
கடந்த வருடம் குறித்த கிராமத்தின் அனைத்து வீதிகளும் வெள்ள நீர் உட்புகுந்தமையினால் வீதிகள் துண்டிக்கப்பட்ட நிலையில் உலங்கு வானுர்தி மூலம் உணவு பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் குஞ்சுக்குளம் கிராமத்திற்கான பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளது!-Photos
Reviewed by NEWMANNAR
on
May 15, 2015
Rating:
No comments:
Post a Comment