வடமாகாண குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர் தினம் இன்று மன்னாரில் அனுஸ்ரிப்பு.-Photos
குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர் தினம் இன்று செவ்வாய்க்கிழமை மன்னாரில் அனுஸ்ரிக்கப்பட்டது.
வடமாகாண குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்களை உள்ளடிக்கி குறித்த நிகழ்வு இடம் பெற்றது.மன்னார் நகர சபை மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது மன்னார்,வவுனியா,கிளிநொச்சி,முல்லைத்தீவு,யாழ்ப்பாணம் ஆகிய மாவட்ங்களைச் சேர்ந்த குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர் பலர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம்,சிறப்பு விருந்தினராக வடமாகாண மீன்பிடி,போக்கு வரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்,மற்றும் கௌரவ விருந்தினர்களாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி யூட் ரதனி,மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி அன்ரன் சிசில்,மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள்ஈவைத்தியர்கள் என நூற்றுக்கனக்கானவர்கள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்களாக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள 4 பேரூக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்வுகளும் இடம் பெற்றது.பல வருட இடைவெளியின் பின் குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர் தினம் வடமாகாணத்தை ஒன்றினைத்து மன்னாரில் நடாத்தப்படுவது இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடபத்தக்கது.
வடமாகாண குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர் தினம் இன்று மன்னாரில் அனுஸ்ரிப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
May 05, 2015
Rating:
No comments:
Post a Comment