மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு யோசப் ஆண்டகை விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்திக்கின்றோம்- மன்னார் மாவட்ட இந்துக்குருமார் பேரவை.
மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு யோசப் ஆண்டகை அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தினைகளை மேற்கொண்டு வருவதாக மன்னார் மாவட்ட இந்துக்குருமார் பேரவை தெரிவித்துள்ளனர்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்கள் நோய் வாய்ப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில்; சேர்க்கப்பட்ட செய்தி கேட்டு நாம் மிகவும் வேதனையடைந்தோம்.
இவர் மிக விரைவில் குணமடைந்து மன்னார் வந்து தம் பணி தொடர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.
இவர் பூரண சுகம் பெற வேண்டி இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். இவ்வாறு மன்னார் மாவட்ட இந்துக்குருமார் பேரவை தமது செய்தியில் தெரிவித்துள்ளனர்.
(மன்னார் நிருபர்)
மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு யோசப் ஆண்டகை விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்திக்கின்றோம்- மன்னார் மாவட்ட இந்துக்குருமார் பேரவை.
Reviewed by NEWMANNAR
on
May 05, 2015
Rating:
No comments:
Post a Comment